• சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களால் கவர்ந்திழுக்கும் மென்மைமிகு மலரான நாகலிங்கப்பூ (cannonball flower (Couroupita guianensis)) தென் அமெரிக்காவை பூர்வீகமாக்க கொண்டது. மேலும் அதன் பழங்களின் வட்டமான பீரங்கி குண்டுகளைப் போன்ற அமைப்பினால் அவை இக்காரணப்பெயரை பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இத்தாவரத்தை இலங்கை, இந்தியா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தினர், இதை புனித மலராக கருதும் இந்து மற்றும் பௌத்தர்கள் இது சல் மரத்தின் வழி வந்தது என நம்புகின்றனர்.
  • ஆனால் பௌத்த மற்றும் இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான சல் மரத்தின் தாவரவியற் பெயர் ‘ஷோரியா ரோபஸ்டா’ ஆகும். இது 2,000 ஆண்டுகளுக்கு முன்தோன்றியதாக குறிப்பிடப்படுகின்றது.
  • பாடப்புத்தகங்கள் மற்றும் உத்தியோகபூர்வ விழாக்கள் உட்பட பல இடங்களில் இவை சல் மரமாக தவறாக அடையாளம் காணப்படுவது பெருகிவருகிறது.

மென்மையான சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் கலவையுடன் ஜொலிக்கும், மணம் நிறைந்த நாகலிங்கப்பூ (கூரூபிடா கியானென்சிஸ்) என்பது இலங்கையின் இந்து மற்றும் பௌத்த வழிபாடுகளின் போது இறைவனுக்கு அர்ச்சிக்கப்படுகிறது. பௌத்த மதச் சடங்குகளின் போது புனித மலராக கருதப்படும் சல் என சிங்களமொழியில் அழைக்கப்படும் இம்மலரானது அதி உத்தம கௌத்தம புத்தரின் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை கதையுடன் பின்னிப் பிணைந்தாக இருக்கிறது. இப்பகுதியில் உள்ள இந்துக்கள் இதை நாகலிங்கம் என்று கருதுகிறனர், இது இந்துக்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானுக்கு அர்ச்சிக்கப்படும் ஓர் மலராகும்.

இவ்வாறு அமையப்பெற்றிருப்பினும், எண்ணற்ற பக்தர்களால் நம்பப்படுவது போன்று நாகலிங்க மரம் என்பது ஓர் புனிதமரமல்ல. உண்மை என்னவெனில் இவை 1800 களின் பிற்பகுதி வரை ஆசியாவிற்கு வரவேயில்லை, அதன் பிறகே அவை தமது சொந்த மண்ணான மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டது. அவ்வாறெனில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்து மதம் அல்லது பௌத்த மதத்தின் நியதிகளின் ஒரு பகுதியாக இத்தாவரம் அமைவதற்கான வாய்ப்பில்லை.

பிரிட்டிஷ் தாவரவியலாளர் ஹென்றி ட்ரிமனால் (1893 – 1900 க்கு இடைப்பட்ட காலத்தில் தொகுக்கப்பட்ட) ‘இலங்கைத் தாவரங்களுக்கான கையேடு’ எனும் நூலில் நாகலிங்கப் பூவைப் பற்றி குறிப்பிடப்படவில்லை. 1875 ஆம் ஆண்டில் தாவரவியலாளர் ஜே.டி.ஹ_க்கர் என்பவரால் தொகுக்கப்பட்ட ‘பிரிட்டிஷ் இந்தியாவின் தாவரங்கள்’ எனும் நூலிலும் இது தொடர்பில் எச்சான்றும் இல்லை.

இது தொடர்பாக இலங்கை தாவரவியல் பூங்கா துறையின் முன்னாள் இயக்குநர் ஜெனரல் சிறில் விஜேசுந்தர அவர்கள் “இந்த புத்தகங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் இயற்கையாகவே உருவான தாவரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களும் உள்ளடங்கியுள்ளன, ஆனால் இந்த வரலாற்று அறிவியல் தொகுப்புகளில் அது இல்லாததால் நாகலிங்க மரம் இத்தீவிற்குரியதல்ல என்பது தெளிவாக தெரிகிறது, இத்தாவரமானது அச்சமயத்தில் இயற்கையாக அமைந்திருக்கவில்லை அல்லது உள்நாட்டில் காணப்படவில்லை என்பதைக் குறிக்கிறது” எனக் கூறினார்.

“1881 ஆம் ஆண்டில் பேராதனையில் உருவாக்கப்பட்ட அரச தாவரவியற் பூங்காவில் நடுவதற்காக நாகலிங்க தாவரத்தின் முதல் மரக்கன்றுகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன,” என்று விஜேசுந்தர அவர்கள் மொங்கபே வலைதளத்திற்கு மேலும் கருத்து தெரிவித்தார். அவரால் இலங்கை மண்ணில் விதைக்கப்பட்ட அத்தத்துப்பிள்ளைகள் 15 ஆண்டுகளின் பின் நன்கு வேர்விட்டு கிளைப்பரப்பி காய்த்து தொங்குகின்றன. ஒரு நூற்றாண்டிற்கு முந்திய பகுதி வரையில் அதாவது அவை ஒப்பீட்டளவில் நாட்டிற்கு புதிதாக இருந்த போது நாகலிங்க மரத்தினை அடையாளம் காண்பது தொடர்பில் எந்தவொரு குழப்பமும் இருக்கவில்லை. இது நம் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவே அங்கீகரிக்கப்பட்டது” என அவர் மேலும் தெரிவித்தார்.

1901 ஆம் ஆண்டிற்கான இத்தகட்டில் சல் என உள்நாட்டினரால் அழைக்கப்படும் தாவரம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, இது இங்கிலாந்தின் மன்னர் ஜோர்ஜ் வி என்பரால் இலங்கைக்கான தனது வருகையை நிறூபிக்கும் வகையில் ஒரு நாகலிங்க மரத்தை (கூரூபிடா கியானென்சிஸ்) நடுவதனை பதிவு செய்கிறது, மேலும் இது இம்மரத்தின் மீதான குழப்பம் மிக சமீபத்தியது என்பதனையும் குறித்து நிற்கின்றது.

இங்கிலாந்து மன்னர் ஜோர்ஜ் வி இலங்கைக்கு (அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது) விஜயம் செய்ததை நினைவுகூரும் வகையில், 1901 ஆம் ஆண்டில் அரச தாவரவியல் பூங்காவில் ஒரு நாகலிங்க மரம் நடப்பட்டது. உள்நாட்டின் மொழியான சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ள நினைவுத் தகட்டில் அந்த மரத்தை குரூபிட்டா என குறிப்பிட்டிருந்தனர். பெயரில் நிலவிய குழப்பம் காரணமாக அதனை எளிதாக அடையாளம் காணும் வகையில்  ‘சல்’ என்ற பெயரில் இங்கிருக்கும் இனத்தவர்களினால் அது அழைக்கப்பட்டது. இலங்கை தாவரங்களை ஆவணப்படுத்திய தாவரவியலாளர்கள் நிச்சயமாக உள்ளுர் பெயரை பயன்படுத்தி, உள்நாட்டு மொழியில் மரத்தை அறிமுகப்படுத்தியிருப்பார்கள்” என்று விஜேசுந்தர கூறினார்.

அரச தாவரவியற் பூங்காவின் தற்போதைய தலைவரான ஷெலோமி கிருஷ்ணராஜா மொங்காபேயிடம் தமது கருத்துக்களை பதிவுசெய்த போது, “பௌத்த கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள உண்மையான சல் மரம் ‘ஷோரியா ரோபுஸ்டா’ என்று அழைக்கப்படும் மரமேயாகும். புத்தர் பிறந்த நேபாளம் உட்பட இந்திய துணைக் கண்டம் முழுவதும் இத்தாவரம் பொதுவாக காணப்படுகிறது. இவை புராணக்கதைகளுக்கும் பொருந்துகிறது. பேராதனை தாவரவியல் பூங்காவில் ஷோரியா ரோபஸ்டா மரங்கள் பல பூத்துக்குலுங்கிக் கொண்டிருக்கின்றன, ”என்று கிருஷ்ணராஜா மோங்காபேவிடம் கூறினார்.

தன் மணத்தால் நம்மை வசீகரிக்கும் மலர்ப்பந்தலைக் கொண்ட சல் மரமானது உலகின் மிகப் பழமையான இரண்டு மதங்களின் மூலக் கதைகளில் எவ்வாறு இணைக்கப்பட்டது என்பதைப் உணர்வதொன்றும் கடினமான காரியமல்ல, அதன் மணம் கமிழும் பூவுக்குத்தான் அத்தனை நன்றிகளும்.

அழகிய நாகலிங்கப் பூவானது ஆறு இதழ்களுடன் மையத்தில் ஒரு அடித்தளத்துடன்  இணைக்கப்பட்டு உள்ளது, நடுவில் ஒரு சிறிய மேடு மற்றும் ஒரு பேட்டை உள்ளது. மேட்டுப் பகுதியை சுற்றியுள்ள அடிவாரத்தில், மகரந்தத்துடன் மகரந்தக்காம்புகள் உள்ளன, மேலும் மேடு உள்ளடக்கிய பேட்டை மீது மகரந்தகளற்ற நீண்ட மகரந்தத் தண்டுகள் உள்ளன.

பௌத்த மதத்தின் படி இதற்கோர் விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது, அம்மேடானது ஒரு ஸ்தூபியைக் குறிக்கிறது, அதில் நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன, அதே சமயம் அடிவாரத்தில் உள்ள மகரந்தங்கள் நினைவுச்சின்னங்களை வணங்கும் பக்தர்களைக் குறிக்கின்றன. பேட்டை மீதான நீண்ட மகரந்தத் தண்டுகள் ஸ்தூபத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக வானத்திலிருந்து இறங்கிய கடவுளாக கருதப்படுகின்றன.

இதுவே இந்துக்களைப் பொறுத்தவரையில், நாகலிங்கப்பூவின் பெயரான நாகலிங்கம் என்பது நாகம், மற்றும் சிவபெருமானின் சின்னமான லிங்கம் என்பவற்றை இணைத்துக் குறிக்கிறது. இந்து புராணங்களின்படி, அடிவாரத்தில் உள்ள மேடு லிங்கமாக கருதப்படுகிறது, அதே நேரத்தில் பேட்டை லிங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு நாகத்தை குறிக்கிறது.

பௌத்த கதைகளில் விவரிக்கப்பட்டுள்ள அசல் சல் தாவரம், ‘ஷோரியா ரோபஸ்டா’ என்று நம்பப்படுகிறது, இது வரலாற்று ரீதியாக இந்தியாவிலும் நேபாளத்திலும் மட்டுமே காணப்பட்டது, ஆனால் மிக சமீபத்திய ஆண்டுகளில், இலங்கையிலும் வளரத் தொடங்கியது. படம்: அரச தாவரவியல் பூங்கா, பேராதனை

தவறான அடையாளப்படுத்தல்கள்

இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சி. கியானென்சிஸ் செழித்து வளர்ந்து வருவது போன்று, உண்மையான நாகலிங்கம் மற்றும் இம்மரத்திற்கும் இடையிலான அடையாளத் தொலைதல்களும் செழிப்புற்று வளர்கிறது. நாகலிங்கப்பூவை அரசு நடத்தும் பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகத்தில் சேர்ப்பது, ஆரம்பத்திலிருந்தே தவறான தகவல்களை பொதுமக்களுக்கு திறம்பட வழங்குவது போலுள்ளதுடன் இது மிகவும் குறிப்பிடத்தக்க தவறுகளில் ஒன்றாகும்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் வன சூழலியல் பேராசிரியரான நிமல் குணதிலக்க இது தொடர்பில் கருத்து கூறுகையில், ‘உண்மையான சல் மரத்தின் தவறான அடையாளம் சில நேரங்களில் கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது. ஆயுர்வேத விஞ்ஞானம் குறித்த ஒரு மாநாட்டின் போது, ஆயுர்வேத செய்முறையை பரிசோதித்த ஒரு ஆராய்ச்சி குழு, மருத்துவ சேர்மங்களின் சேர்க்கை செயல்படவில்லை என்று தெரிவித்தது. குணத்திலக்கே அவர்கள் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய சேர்மங்களைப் பார்த்தபோது, குழு தவறாக சல் மரத்திலிருந்து பட்டைகளைப் பயன்படுத்தியிருப்பதைக் கண்டறிந்தார். ” பண்புகள் வேறுபட்டதால் அந்த கலவையானது நிச்சயமாக செயல்படாது” என்று அவர் மொங்கபேவிடம் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலிகள் பிரிவினைவாத கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் 2002 ஆம் ஆண்டில் பூர்வீக சல் நடப்பட்டது, தவறான தாவரமொன்றின் அடையாளம் எவ்வாறு பரவலாகிவிட்டது என்பதைக் குறிக்கிறது. படம் – தமிழ்நெட்

2002 இல் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் புலி கிளர்ச்சிக் குழுவிற்கும் இடையில் நோர்வே ஏற்பாட்டிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, “அமைதியின் அடையாளமாக” பௌத்தர்களுக்கும் இந்துக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பூக்கும் மரத்தை நடவு செய்ய இரு பிரதிநிதிகளும் விரும்பினர், அதனடிப்படையில் நாகலிங்க மரம் நடுவதற்கு அங்கீகாரம் பெற்று, மேலும் சமாதானத்தை நோக்கிய புதிய பயணத்தின் அடையாளமாக ஒரு நாகலிங்க மரக்கன்றுகளை தவறாக நட்டனர்.

அந்த அமைதிப் பேச்சுக்கள் சரிந்தன, ஆனால் நாகலிங்க மரங்களின் அடையாளம் மட்டும் இன்னும் வலுவாக உள்ளது.

மாளக்க றொட்ரிகோவினால் கடந்த வருடம் ஜூலை 20 திகதி மொங்கபே/Mongabay இணையதளத்திற்கு “In Sri Lanka, a South American flower usurps a tree sacred to Buddhists and Hindus” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்