இலங்கையில் பாதுக்கை மாவட்டத்தில் வசித்துவரும் 16 வயதுடைய பசிந்து தில்ஷான் இயற்கையின் மீது அதீத ஆர்வம் கொண்டவர், அதுமட்டுமல்லாது அவர் அது தொடர்பில் பயின்றும் வருகிறார். கொவிட் 19 ஊடரங்கின் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிபோன அவரிட்கு முத்தாய் சிக்கியது ஐநெச்சுரலிஸ்ட் எனும் செயலி. இது ஒரு குடிமகனுக்கான அறிவியல் சார் செயலியாகும். இதனூடாக பயனாளர் உலகம் முழுதும் உள்ள தாவரம் மற்றும் விலங்குகளை அடையாளம் காணுவதற்கு வழிவகுக்கின்றது. தமது கனவே கையில் சிக்கியதாய் உணர்ந்த தில்ஷான் உடனடியாக கமராவுடன் தம் வீட்டுத் தோட்டத்தில் உள்ள பல்வகை உயிரிகளையும் படம்பிடித்து அதனை ஐநெச்சுரலிஸ்ட் செயலியில் பதிவேற்றினார்.

ஒவ்வொரு பதிவேற்றத்தின் போதும் அச்செயலியானது தானாக அப்புகைப்படத்திலுள்ள உயிரி தொடர்பான தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் அடையாளப்படுத்தல்களை வழங்குகிறது. மேலும் டில்ஷான் முன்பின் அறிந்திராத உயிரினங்களுக்கான பெயர்களை ஐநெச்சுரலிஸ்ட்டின் விஞ்ஞானிகள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான நிகழ்நிலைக் குழாமின் வழியாக அறிந்துக்கொள்ளவும் முடிந்தது.

எனது சூழலில் உள்ள உயிரினங்களின் பல்வகைத்தன்மையை அறிந்துக்கொள்வதில் நான் அதிக கவனஞ்செலுத்தவில்லை. ஆனால் ஐநெச்சுரலிஸ்ட் எனக்கு அந்த ஆர்வத்தை மெருகேற்றியதுடன் அவற்றை அறிந்துக்கொள்ளவும் எனக்கு உதவியது. என அவர் தெரிவித்தார்.

அவரின் அவதானிப்புக்களில் ஒன்றான இலைமூக்குப் பல்லி, ‘இன்றைய நாளுக்கான அவதானிப்பு’ எனும் தொனிப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்டது.  மேலும் அன்றைய தினத்தில் உலகலாவிய ரீதியில் பதிவேற்றிய ஆயிரத்திற்கும் அதிகமான பதிவேற்றல்களில் இருந்து இத்தேர்வு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் 19 ஊரடங்கு காலப்பகுதியானது இளம் உயிரியல் பட்டதாரியான சத்துரி ஜயதிஸ்ஸவுக்கு ஜநெச்சுரலிஸ்ட் மூலம் தம் சூழலில் உள்ள உயிரின் பல்வகைமைத் தொடர்பில் அவதானிப்புக்களை மேற்கொள்வதற்கான பொறுமையையும் நேரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.
படத்தொகுப்பு: இந்திக ஜயதிஸ்ஸ.

இயற்கை ஆர்வலர்கள், உயிரியலாளர்கள் மற்றும் இயற்கை விரும்பிகளுக்கு தங்கள் அவதானிப்புகளைப் பகிர்ந்து கொள்ளவதற்கான ஓர் டிஜிட்டல் வலைதளத்தை வழங்கும் ஓர் நோக்கோடு ஒரு குடிமகனுக்கான அறிவியல் கருவியாக 2008 இல் இச்செயலி ஆரம்பிக்கப்பட்டது. ஐநெச்சுரலிஸ்ட் செயலியானது கணனி திரை மற்றும் திறன்பேசி திரை போன்ற இருவகையான பதிப்புகளைக் கொண்டுள்ளது, இது புதிய அவதானிப்புகளின் கள அடிப்படையிலான பதிவுகளை இதில் மேற்கொள்ள முடியும். மேலும் இச்செயலியானது அதிநவீனத்துவ பயன்பாட்டுக்காய் உருவாக்கப்பட்டுள்ளது.

இச்செயலியின் இன்னொரு சிறப்பம்சமான செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளானது தாம் பதிவேற்றிய புகைப்படங்களை சுய அடையாளம் காண உதவும்;. ஐநெச்சுரலிஸ்ட் 2017 இல் ஒரு மில்லியன் அவதானிப்புகளை பதிவுசெய்திருந்தது. மேலும் இப்போதைய கணக்கெடுப்பின்படி இதில் 57 மில்லியன் அவதானிப்புகள் பதிவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முதல் ஐநெச்சுரலிஸ்ட் அவதானிப்பானது 2011 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்டது, மேலும் 2021 ஜனவரியில் இந்நாட்டின் அவதானிப்பு குறியீடானது 50,000 ஐயும் கடந்துள்ளது.

“இது இலங்கையில் உள்ள உயிரின் பல்வகைமைக்கும் ஐநெச்சுரலிஸ்ட் சமூகத்திற்கும் கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரம் மற்றும் மிகச் சிறந்த திருப்புமுனையாகும் ” என ஐநெச்சுரலிஸ்ட் இன் பங்குதார ஈடுபாட்டு மூலோபாயவாதியான கேரி செல்ட்ஸர் மொங்கபேவிடம் கருத்து தெரிவித்தார்.

மேலும் அந்த அவதானிப்புகளில் கிட்டத்தட்ட பாதி அவதானிப்புக்கள் உலகளாவிய பல்லுயிர் தகவல் மையத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன, செல்ட்ஸர் மேலும் கூறினார்.

நிகர-சிறகுகள் கொண்ட ஒரு வண்டான ‘அட்டெலியஸ் எக்ஸ்பான்சிகார்னிஸ்’ சமீபத்தில் iNaturalist’s Observation of the Day இல் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பட உபயம் திலினா ஹெட்டியாராச்சி.

தெற்காசிய ரீதியில் இரண்டாமிடம்

‘தெற்காசியாவை பொறுத்தவரையில் இந்தியா மட்டுமே அதிகமான இயற்கை ஆய்வுகளை பதிவு செய்துள்ளது. ஆசியாவில் உள்ள 53 நாடுகளின் மத்தியில் இலங்கை 14 வது இடத்தில் உள்ளது. இலங்கையின் ஐநெச்சுரலிஸ்ட் சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஓர் நிலையான வளர்ச்சி காணப்படுகிறது, மேலும் இத்தீவில் உள்ள உயிரியலாளர்கள், வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள், பூங்கா அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் ஐநெச்சுரலிஸ்ட் செயலி மேலும் புகழ் பெற்றால் அடுத்த 50,000 அவதானிப்புகளை எட்டுவது ஒன்றும் பெரிய விடயமல்ல.’ என்று செல்ட்ஸர் கூறினார்.

கணனித்திரை இயங்குதளத்திற்கான இலங்கை பயனர்கள், உலகளாவிய சராசரி பயனர்களை விட இளம் வயதுடையவர்களாக இருப்பதாக ஐநேச்சுரலிஸ்ட்டின் இணை இயக்குனர் ஸ்காட் லோரி தெரிவித்தார். லோரியின் உலகளாவிய தரவு 26மூ பயனர்கள் 24-34 வயதுடையவர்கள் என்றும் 22மூ பேர் 18-24 வயதுடையவர்கள் என்றும் காட்டுகிறது. இலங்கையில், ஐநெச்சுரலிஸ்ட் சமூகத்தில் 34மூ ஆனோர் 24-34 வயதிற்கிடைப்பட்டோராகவும்;, 30மூ ஆனோர் 18-24 வயது வரம்பை சேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.

நியூயார்க்கில் உள்ள லாகுவார்டியா சமுதாயக் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞான துறையின் பேராசிரியர் தில்ருக்ஷன் விஜேசிங்க கூறுகையில், “இச்செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள அவதானிப்புக்களின் எண்ணிக்கையின அடிப்படையில் மட்டுமே இலங்கை எதைச் சாதித்திருக்கிறது என்பதை வெளிப்படுத்த முடியாது. ஏனெனில் 2011 இல்; இலங்கையிலிருந்து பதிவேற்றப்பட்ட முதல் அவதானிப்புகள் ஒரு ஆஸ்திரேலியரால் பதிவேற்றப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது.”

வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கள உயிரியலாளரான நுவன் சதுரங்க ஜயவர்தன என்பவரே ஐ.நேச்சுரலிஸ்டுக்கு அவதானிப்புகளைச் சமர்ப்பித்த இலங்கையின் முதல் குடியிருப்பாளர் ஆவார். ஆரம்ப காலத்தில் பெரும்பாலாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் பல்லுயிர் நிறைந்த தீவுகளுக்கு வரும் ஆர்வலர்களால் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் இது இப்போது தலைகீழாக உள்ளது..

இதில் பதிவேற்றப்பட்ட படங்களின் தரம் மற்றும் இயைபின் அடிப்படையில் மொத்த அவதானிப்புக்களின் தரம் மேம்பட்டதாக உள்ளது, ஆனால் அனுபவமற்ற பயனர்கள் இதன் உண்மையான பெருமதிமிக்க பதிவுகளை மேற்கொள்வதற்கு தமக்கு தேவையான திறன்களையும் பொறுமையையும் வளர்த்துக் கொள்ள சிறிது காலம் தேவைப்படலாம். என விஜேசிங்க மொங்கபே தளத்திடம் கருத்து கூறினார்.

இலங்கை யாழ்ப்பாணத்தில் அவதானிப்புக்களை மேற்கொள்ளும்வரையில் இலங்கையில் உள்ள பாத்தேனியம் வண்டுகளின் இயல்பான நிகழ்வு தொடர்பில் அறியப்படவில்லை.
பட உபயம்: அரவிந்த் சுகுமார்.

அரியபுதிய உயிரினங்கள்

“ஐநேச்சுரலிஸ்ட் அவதானிப்புகள் மூலம், இலங்கையின் பல்லுயிர் பரவலைப் பற்றிய புரிதல் கணிசமான அளவில் மேம்பட்டுள்ளது. இவ்வவதானிப்புகளில் முன்னர் பதிவு செய்யப்படாத இனங்கள் காணப்படுவது மிகவும் வியக்கத்தக்க விடயமாகும். பாதுகாக்கப்பட்ட மாதிரி விளக்கங்களிலிருந்து மட்டுமே அறியப்பட்ட பல உயிரினங்களை இப்போது நேரடியாக அறிந்துக்கொள்ளக்கூடியதாக உள்ளது, அதற்கான நன்றிகளை ஐநேச்சுரலிஸ்ட் இல் தம் இயற்கை வாழ்விடங்களில் புகைப்படங்களை எடுத்து அதனை பதிவேற்றிய பயனர்களுக்கே சமர்ப்பிக்க வேண்டும்.” என விஜேசிங்க மேலும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டில், அரவிந்த் சுகுமார் வடக்கு இலங்கையில் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட ஒரு அழகிய வண்டினை புகைப்படமெடுத்தார.; இவ்வண்டினமானது மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட பார்த்தீனியம் வண்டு (ஜைகோகிராம்மா பைகோலோராட்டா) என அடையாளம் காணப்பட்டது. படையெடுக்கும் இனமான பார்த்தீனியம் ஹிஸ்டெரோபோரஸ் என்ற ஆக்கிரமிக்கும் களைச்செடிக்ளை  கட்டுப்படுத்தும் நோக்கோடு இது தெற்காசியாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை முதுகலைப் பிரிவின் விரிவுரையாளர் திலினா ஹெட்டியராச்சி இவ்வண்டு தொடர்பாக கூறுகையில், இவ்வண்டை இலங்கையின் தோல்வியடைந்த களைச்செடிக் கொள்ளியாக அறிமுகப்படுத்துகிறார்.

சுகுமார் கடந்த ஆண்டு தனது படிக்கட்டின் அருகில் இருந்து வண்ணங்கள் நிறைந்த பூச்சியொன்றை கண்டுபிடித்தார், ஆரம்பத்தில் அதை அவர் ஒரு வண்டு என்றே நினைத்தார், ஆனால் ஐநேச்சுரலிஸ்ட் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நிபுணர் இதனை ‘யூகோரிடியா ஒர்னாட்டா’ எனும் கரப்பான் பூச்சி என அடையாளப்படுத்தினார், இவ்வுயிரினமானது இதற்கு முன்னர் இலங்கையில் பதிவு செய்யப்படவில்லை.

தினசரி மற்றும் வாராந்த அடிப்படையில் ஐநேச்சுரலிஸ்ட்டின் அவதானிப்புகளைப் பார்வையிடலாம். தென்னிலங்கையின்; இளங்கலை பட்டதாரியான சத்துரி ஜெயதிஸ்ஸ, சிறிய திர்ஹினஸ் குளவி தொடர்பான அவதானிப்பை மேற்கொண்டு அதற்கான ஐநேச்சுரலிஸ்ட்டின் பாராட்டையும் தம்வசம் குவித்துக்கொண்டார். 

பட உபயம்: ஐநேச்சுரலிஸ்ட்

அசல் விஞ்ஞான ஆராய்ச்சிக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு குடிமகனுக்கான அறிவியற் கருவியாக ஐநேச்சுரலிஸ்ட் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமானது ஜனவரி 2021 வரையிலான ஐநேச்சுரலிஸ்ட் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு வரையறை பதிவின் அடிப்படையிலான உயிரினங்களின் சதவீதத்தைக் காட்டுகிறது.

கொவிட்-19 மற்றும் ஐநேச்சுரலிஸ்ட்

இச்செயலின் ஊடாக வெளிப்புற ஆய்வுகளை பாதுகாப்பாகவும் தனியாகவும் செய்யக்கூடியதாக இருந்தது, மேலும் அதனைத் தொடர்ந்து இதனூடாக சமூக தொடர்புகள் மற்றும் நிகழ்நிலை அறிவு பரிமாற்றம் போன்றனவும் நடைபெறுவதால கொவிட்-19 தொற்று ஊரடங்கு காலத்தின் போது ஐநேச்சுரலிஸ்ட் ஒரு பயனுள்ள மற்றும் ஈர்க்கக்கூடிய தளமாக திகழ்ந்தது. என செல்ட்ஸர் கூறினார்.

“ஆனால் வெவ்வேறு நாடுகளில் மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக எந்தவொரு உலகளாவிய நடைமுறை போக்குகளையும் கண்கானிப்பது  கடினம்’ என அவர் மேலும் தெரிவித்தார். “தொற்றுநோய் ஊரடங்கின் போது வீட்டுச் சூழக்குள் ஆராயக்கூடிய வகையில் இருந்தாலும் அவற்றை வெளி உலகுடன் ஆர்வமாய் பகிருவதற்கு அவர்களை ஊக்குவிப்பதன் மூலம், ஐநேச்சுரலிஸ்ட் மக்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதைப் பற்றிய பல கதைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

ஆய்வாளர் அமிலா சுமனபாலா இலங்கையின் 16,000 க்கும் மேற்பட்ட அடையாளப்படுத்தல்களை மேற்கொண்ட ஐநேச்சுரலிஸ்ட் சமூகத்தின் சிறந்த இனங்காட்டியாவார். அவர் ஊசித்தும்பிகள் குறித்து முதுகலை படிப்புகளை மேற்கொண்டு வருகிறார், மேலும் ஐநேச்சுரலிஸ்டை பயன்படுத்தி இலங்கையின் பூச்சி வாழ்க்கை தொடர்பான ஆவணப்படுத்தல்களை மேற்கொள்ளவும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

 “எனது களப்பணியின் போது நான் கவனிக்கும் மற்றும் புகைப்படம் எடுக்கும் பூச்சிகள் மற்றும் பிற விலங்குகள் தொடர்பாக தெரிந்துக்கொள்ளவும் அவற்றை அடையாளப்படுத்திக்கொள்ளவும் நான் ஐநேச்சுரலிஸ்ட் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கினேன், எனது பணிக்கு இது ஒரு பெரிய உறுதுணையாக இருந்தது. இவற்றைப் பற்றி தெளிவுப்படுத்திய இனங்காட்டிக் குழாமிற்கு என் நன்றிகள். இது என்னை மேலும் பதிவுகளை மேற்கொள்ளவும் மற்றவர்களுக்கான ஒரு அடையாளப்படுத்தியாக என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் தூண்டியது.” என அவர் ஐநேச்சுரலிஸ்ட் தொடர்பாக தமது கருத்தை தெரிவித்தார்.

மாளக்க றொட்ரிகோவினால் மார்ச் 21ம் திகதி மொங்கபே/Mongabay இணையதளத்திற்கு “Sri Lanka’s budding biologists get their science on with iNaturalist” என்னும் தலைப்பில் எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு. மூலம்