நாம் ஒரு சுறாவின் பெயரைக் கேட்கும்போது, உடனடியாக அதை மிகவும் ஆபத்தான கடல் உயிரினம் என்று நினைக்கிறோம். திரைப்படங்கள் மற்றும் நாவல்கள் அவற்றை எடுத்துக்காட்டியிருக்கும் விதமும் புராணங்கள் அவை பற்றி கட்டமைத்திருக்கும் கதைகள் காரணமாக, மாணவர்கள் அவற்றை மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக கருதுகின்றனர். உலகளவில் 400 க்கும் மேற்பட்ட வகையான சுறாக்கள் பதிவாகியிருந்தாலும், மனித இறப்பு மற்றும் சுறா தாக்குதல்களுக்கு சுமார் 5 இனங்கள் மட்டுமே காரணமாகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சம்பவங்கள் 70 பதிவாகின்றன, இதன் விளைவாக ஆண்டுக்கு ஏழு முதல் பத்து வாரியான மனித இறப்புகள் ஏற்படுகின்றன.

டைனோசர் சகாப்தத்திற்கு முந்தைய சுறாக்கள் நானூற்று இருபது மில்லியன் ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக ஆதிகால படிமங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

சுறாக்கள் ஒரு வகை குருத்தெலும்புடைய மீன் இனமாகும். இது உயிரியல் ரீதியாக முதிர்ச்சியடைய நீண்ட நேரம் எடுக்கும். சுறாக்கள் ஒரு சிறப்பு என பிளாங்க்டன் (plankton) எனப்படும் கடலில் காணப்படும் பாசி போன்ற நுண்ணுயிர்களையம் உணவாக சாப்பிடுகின்றன, மேலும் இறந்த விலங்குகளின் பாகங்களையும் சாப்பிடுகின்றன. சில இச்சுறாக்கள் வேட்டையாடுபவர்களைப் போலவும் நடந்து கொள்கின்றன

சுறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆசிய நாடுகளில் துடுப்பு எனப்படும் மீனின் வெளித்தோலை பயன்படுத்தி தயாரிக்கப்படும் ‘சுறா சூப்’ ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சூப் தயாரிக்க நூற்றுக்கணக்கான மில்லியன் சுறாக்கள் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதலாக, மீன்பிடித் தொழிலில் மனித நுகர்வுக்காக ஏராளமான சுறாக்கள் பிடித்து கொல்லப்படுகின்றன. சுறா கல்லீரலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சுறா எண்ணெய்க்கும் பெரும் மவுசு உள்ளது.

உலகளவில் 400 க்கும் மேற்பட்ட வகையான சுறாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 201 ஆபத்தானவை என்று (IUCN -International Union for Conservation of Nature) என்றழைக்கப்படும் இயற்கையைப்பாதுகாக்கும் சர்வதேச ஸ்தாபனத்தின் சிவப்பு தகவல் அறிக்கை கூறுகிறது.

இலங்கை கடலைச் சுற்றி சுமார் 66 வகையான சுறாக்கள் கடலில் வாழ்கின்றன, அவற்றில் பல ஆபத்தானவை.

இலங்கையின் மீன்பிடி வளத் திணைக்களத்தின்படி, இலங்கையில் மீன்பிடித் தொழிலில் கணிசமான எண்ணிக்கையிலான சுறாக்கள் கொல்லப்படுகின்றன. CITES சர்வதேச மாநாட்டின் படி, பாதுகாக்கப்பட்ட சுறா இனங்கள் பல இலங்கை நீரில் வாழ்கின்றன, இதில் ஒசெனிக் வெள்ளை முனை சுறா உள்ளது. சட்டவிரோதமாக சுறாக்களைக் கொல்லும் நாடுகளின் பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.

ஆழமான மற்றும் ஆழமற்ற கடல்களில் வாழும் சுறாக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு அவற்றின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வருட சுறா விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்யா கிரியெல்ல

தருஷி பிடிகலவினால் BufferZone சிங்கள தளத்தில் “මෝරුන් පිළිබඳව දැනුවත් කිරීමේ දිනය අදයි’ என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்