அமெரிக்காவின் மேற்கு அமெரிக்காவில் காட்டுத்தீயிலிருந்து வரும் புகையின் குறுகிய கால வெளிப்பாடு கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மற்றும் இறப்புகளில் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
அறிக்கையின்படி, காட்டுத்தீயில் இருந்து தினசரி அதிகரித்த துகள்கள் (Particulate Matter –PM) 2.5 க்கு காரணமான ஒட்டுமொத்த கோவிட் -19 தொற்றுக்குள்ளானோர் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை முறையே 19,742 மற்றும் 748 ஆகும்.
அமெரிக்கா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வின் கண்டுபிடிப்புகள் ஆகஸ்ட் 13, 2020 அன்று அமெரிக்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயின் போது “நுண்ணிய துகள்களின் வெளிப்பாட்டால் அதிகப்படியான COVID-19 தொற்றுக்கள் மற்றும் இறப்புகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
காட்டுத்தீ இல்லாத நாட்களில் ஒப்பிடும்போது தினசரி கோவிட் -19 தொற்றுக்குக்குள்ளானோர் மற்றும் இறப்பு விகிதம் காட்டுத்தீ நாட்களில் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
டிசம்பர் 2020 நிலவரப்படி மேற்கு அமெரிக்காவில் 10 மில்லியன் ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் காட்டுத்தீயினால் எரிக்கப்பட்டது. எரியும் காடுகளிலிருந்து வெளிப்படும் புகை பிஎம் 2.5 உடன் அடர்த்தியானது மற்றும் நுரையீரல் மற்றும் இதர முக்கிய உறுப்புகளில் எளிதில் இது ஊடுருவுகிறது.
காட்டுத்தீ பரவிய நாட்களில் துகள்களின் நிலை PM 2.5 நிலைகள் வரலாற்று உச்சத்தை எட்டியது: கலிபோர்னியாவில் உள்ள மோனோ கவுண்டி (Mono County) பிரதேசம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் அனுபவித்தது PM 2.5 நிலைகள் ஒரு கன மீட்டருக்கு 500 மைக்ரோகிராமினை தாண்டியது. இந்த நச்சு மாசு செப்டம்பர் 14-17, 2020 அன்று க்ரீக் தீயினால் (Creek Fire) ஏற்பட்டது.
அமெரிக்கா முழுவதும் சமீபத்திய ஆண்டுகளில் PM2.5 செறிவின் 25 சதவிகிதம் மற்றும் மேற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பாதி வரை அதிகரித்ததிற்கு காட்டுத்தீ பொறுப்பாகும்.
நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் (New England Journal of Medicine) வெளியிடப்பட்ட 2019 ஆய்வின்படி, உலகெங்கிலும் உள்ள 600 நகரங்களில் PM10, PM2.5 மற்றும் தினசரி இருதய மற்றும் சுவாச இறப்புகளுக்கு குறுகிய கால வெளிப்பாடு இடையே ஒரு தனித்துவமான தொடர்பு உள்ளது.
கலிபோர்னியா, வாஷிங்டன் மற்றும் ஓரிகான் முழுவதும் மார்ச் 15, 2020 முதல் டிசம்பர் 16, 2020 வரை 92 மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
2020 ஆம் ஆண்டில் கடுமையான காட்டுத்தீ நாட்களில், PM 2.5 அளவு முந்தைய ஆண்டின் அதே நாட்களை விட அதிகமாக இருந்தது. ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பல மாவட்டங்களில் கூடுதல் COVID-19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு இது வழிவகுத்தது.
ஹார்வர்ட் சான் பள்ளியில்(Harvard Chan School) பயோஸ்டாட்டிஸ்டிக்ஸ், மக்கள் தொகை மற்றும் தரவு அறிவியல் (Biostatistics, population and data science ) பேராசிரியர் மற்றும் ஆய்வின் மூத்த எழுத்தாளர் கிளாரன்ஸ் ஜேம்ஸ் கேம்பிள் (Clarence James Gamble) கூறும்போது:
“2020 ஆம் ஆண்டு மேற்கு அமெரிக்கா முழுவதும் COVID-19 தொற்றுநோய் மற்றும் காட்டுத்தீயின் ஒருங்கிணைப்புடன் பொது சுகாதாரத்தில் கற்பனை செய்ய முடியாத சவால்களைக் கொண்டு வந்தது. இந்த ஆய்வில், காலநிலை மாற்றம் – காட்டுத்தீயின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கும் – மற்றும் தொற்றுநோய் ஒரு பேரழிவு சேர்க்கை என்பதற்கான ஆதாரங்களை நாங்கள் வழங்குகிறோம்..” என்று கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளில், அமெரிக்கா சாதனை படைக்கும் காட்டுத்தீயை அனுபவித்தது, இது வருடத்திற்கு 470,000 க்கும் அதிகமான தினசரி வெளிப்பாடுகளின் அதிகரிப்புக்கு வழிவகுத்தது மற்றும் 2001-2004 உடன் ஒப்பிடும்போது 1.85 பில்லியன் அதிக நாட்கள் காட்டுத்தீ அபாயத்தை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் COVID-19 தொற்றுக்கள் மற்றும் இறப்புகளுக்கு பங்களிக்கும் காட்டுத்தீ, PM 2.5 இல் எந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்பதை இந்த ஆய்வு முதலில் அளவிடுகிறது.
Down To Earth இணையத்தளத்தில் சூசன் சாக்கோ-Susan Chacko இனால் ஆகஸ்ட் 18ம் திகதி வெளியான “Smoke from wildfires may have added over 700 COVID-19 deaths to US toll” என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.