இலங்கையில் உள்ள மனேவா, கங்கேவடியா, எழுவன்குளம் மற்றும் கல்னேவா ஆகிய இடங்கள் புதிதாக அடையாளம்காணப்பட்ட சுற்றுச்சூழல் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன என சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (ஆகஸ்ட் 18) சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றின் பிரகாரம், வட மத்திய மாகாணத்தில் உள்ள மனேவா மற்றும் கல்னேவா, வடமேல் மாகாணத்தில் கங்கேவடியா மற்றும் எலுவான்குளம் ஆகியவை அமைச்சின் பல்லுயிர் தொடர்பான அலகு (Biodiversity Unit), புறத்தூண்டுதல்களுக்கு சடுதியாக மாற்றம் காட்டும் வகையில் காணப்படும் சுற்றுச்சூழல் மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டன.
அமைச்சின் செயலாளர் மருத்துவ கலாநிதி அனில் ஜயசிங்க கூறுகையில் இப்பிரதேசங்கள் ஏற்கனவே சுற்றுச்சூழல் மண்டலங்களாக அறிவிக்கப்படாததால், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை செயல்படுத்தும் போது இவ்விடங்கள் பல்வேறு சேதங்களை எதிர்கொண்டதாக அறிக்கைகள் காணப்படுவதாக கூறினார்.
“புதிய ஏற்பாட்டின் கீழ், சுற்றாடல் அமைச்சகம் அந்த முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களை அடையாளம் கண்டு அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும், எனவே அந்த சுற்றுச்சூழல் மண்டலங்களை அழிக்க சட்டத்தால் எந்த தனிநபரும் அல்லது நிறுவனமும் அனுமதிக்கப்படாது.,” என்று கூறினார்.
தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் நான்கு சார்த்துக்களின் கீழ் அவை பாதுகாக்கப்படும் என்றும் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“எனவே, பல்லுயிர் அலகு இத்தகையபுறத்தூண்டுதல்களுக்கு சடுதியாக மாற்றம் காட்டும் வகையில் காணப்படும் சுற்றாடல் பிரதேசங்களை அடையாளம் கண்டு அவற்றை தீவு முழுவதும் பாதுகாக்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது” என்று டாக்டர் ஜயசிங்க கூறினார்.
Comments are closed for this post.