எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து காபனீரொக்சைட் (CO2) வாயுவின் உமிழ்வு 2018 இல் 1.3 Gt ஆக இருந்தது. எதிர்காலத்தில் குறைந்த கார்பன் உள்ளீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவிடத்து 2020 முதல் 2030க்குள் 16.5 Gt வரை அடையலாம்.
சமீபத்தில் பூமியில் வெளியிடப்பட்ட காபனீரொக்சைட் (CO2) உமிழ்வுகளின் உலகளாவிய கணக்கீட்டின்படி, சுத்திகரிப்பு நிலையங்கள் குறைந்த கார்பன் உள்ளீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், 2020-2030 ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் உலகளாவிய ஒட்டுமொத்த உமிழ்வு 10 சதவீதமாக குறைக்கப்படலாம்.
2018 ஆம் ஆண்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உமிழ்வு சுமார் 1.3 ஜிகாடோன் (ஜிடி) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். தணிப்பு உத்திகள் பின்பற்றப்படாவிட்டால் இவை 2020-2030 முதல் 16.5 ஜிடி CO2 ஆக அதிகரிக்கும்.
2018 ஆம் ஆண்டில் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உமிழ்வு சுமார் 1.3 ஜிகாடோன் (ஜிடி) என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனைக் குறைப்பதற்கான தணிப்பு உத்திகள் பின்பற்றப்படாவிட்டால் இவை, 2020-2030 காலப்பகுதியில் 16.5 ஜிடி CO2 ஆக அதிகரிக்கும்.
விஞ்ஞானிகள் வருடாந்திர உமிழ்வை தொடர்புடைய உமிழ்வு காரணிகளுடன் கணக்கிட்டனர்-கார்பன் உமிழ்வு கணக்குகள் மற்றும் தரவுத்தொகுப்புகள் – Carbon Emission Accounts and Datasets (CEADs) -உலகளாவிய சுத்திகரிப்பு உமிழ்வு சரக்கு-Global Refinery Emission Inventory (GREI).
அலகு ரீதியாக , பிராந்திய மற்றும் உலகளாவிய அளவில் சுத்திகரிப்பு துறையில் மிகப்பெரிய CO2 உமிழ்வை அடையாளம் காண CEADs-GREI பயன்படுத்தப்பட்டது.
CEADs-GREI இன் படி, 755 சுத்திகரிப்பு நிலையங்கள் 2000 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் இயங்கின, அவை ஒரு நாளைக்கு மொத்தம் 87 மில்லியன் பீப்பாய்கள் (Mbpd) கொள்ளளவினை கொண்டுள்ள போதிலும் அவற்றின் வருடாந்திர CO2 உமிழ்வானது 1,000 மில்லியன் மெற்றிக் தொன்களாக (Mt) காணப்பட்டது.
செயல்பாட்டில் உள்ள சுத்திகரிப்பு ஆலைகளின் எண்ணிக்கை 2018 இல் 946 ஆக அதிகரித்ததுடன் அவற்றின் மொத்தக்கொள்ளளவு சுமார் 98 மில்லின் பீப்பாய்களாக (Mbpd) வருடாந்திர CO2 உமிழ்வு 1,242 Mt ஆக உயர்ந்தது.
2003 ஆம் ஆண்டில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்துறை சீனா மற்றும் இந்தியாவில் அபார வளர்ச்சியைக் கண்டது, இது நேரடியாக CO2 உமிழ்வை அதிகரிக்க வழிவகுத்தது. சீனாவின் சுத்திகரிப்பு உற்பத்தி முறையே 2003 இல் 11 சதவிகிதம் மற்றும் 2004 இல் 12 சதவிகிதமாக அதிகரித்தது.
மாறாக, 2009 க்குப் பிறகு ஐரோப்பிய சுத்திகரிப்புத் துறை சரிவைக் கண்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் மற்றும் எரிசக்தி கொள்கைகளின் தாக்கத்தின் காரணமாக சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவையின் குறைவு காரணமாகும்.
சீனா மற்றும் இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து CO2 உமிழ்வு, 2000 மற்றும் 2018 க்கு இடையில் அபாரமான வளர்ச்சியை கொண்டிருந்தது. அவற்றின் பங்களிப்பு முறையே ஆறு சதவீதம் மற்றும் 2000 ல் மூன்று சதவிகிதம் 2018 இல் 16 சதவிகிதம் மற்றும் ஏழு சதவிகிதமாக உயர்ந்தது.
அதே காலகட்டத்தில், உலகளாவிய சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயின் உள்ளீட்டு அளவில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் 2000 இல் 22 சதவிகிதம் மற்றும் 24 சதவிகிதமாக காணப்பட்ட பங்கு, 2018 இல் முறையே 17 சதவிகிதம் மற்றும் 21 சதவிகிதமாகக் குறைந்தது.
உலகளாவிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் 2018 இல் இரண்டு வகையான சுத்திகரிப்பு ஆலைகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது – சீனா, இந்தியா மற்றும் மேற்கு ஆசியாவில் புதிய சுத்திகரிப்பு ஆலைகள் (40 வருடங்களுக்கும் குறைவானது) மற்றும் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் உள்ள பழைய சுத்திகரிப்பு ஆலைகள் (40 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டவை).
இரண்டு வகையான சுத்திகரிப்பு ஆலைகளின் சுத்திகரிப்பு திறன் 2018 இல் மொத்த சுத்திகரிப்பு திறனில் முறையே 22 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் மற்றும் அவற்றின் CO 2 உமிழ்வு 22 சதவிகிதம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு துறையின் மொத்த CO 2 உமிழ்வுகளில் 37 சதவிகிதம் ஆகும்.
ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள பழைய சுத்திகரிப்பு ஆலைகள் 2018 இல் இன்னும் அதிக அளவு CO2 ஐ வெளியிடுகின்றன, மேலும் அவை அடுத்துவரும் ஆண்டுகளில் மூடப்பட வாய்ப்பில்லை.
பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகச் சங்கிலியிலிருந்து 40 சதவீத உமிழ்வைக் வெளியிடும் அதேநேரம், ஸ்டேஷனரி கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வின் (stationery greenhouse gas emissions) உலகளாவிய ரீதியில் மூன்றாவது காரணியாக விளங்குகிறது.
Down To Earth இணையத்தளத்தில் சூசன் சாக்கோ-Susan Chacko இனால் ஆகஸ்ட் 23ம் திகதி வெளியான “Global emissions can decline 10% this decade if refineries clean up their act: Report” என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.