• இந்தோனேசிய அரசினால் பறக்கும் சாம்பல்கள் (Fly Ash) மற்றும் படிம சாம்பல்கள் (Bottom Ash) ஆகியன தீங்கிழைக்கக்கூடிய கழிவுகள் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. எனினும் அதனூடாக ஏற்படும் பொருளாதார மற்றும் சுற்றாடல் சார் பாதிப்பு மிகவும் அதிகமானதாகக் கூடும்.
  • இரசத்தினை ஒரு பிரச்சினையாக காணவேண்டாம் – நிலக்கரி சாம்பல்கள் ஆபத்தற்றதாக இந்தோனேசியா அறிவிக்கின்றது.
  • இந்தோனேசிய அரசினால் நிலக்கரிகளை எரித்தலின் ஊடாக வெளியாகும் பறக்கும் சபம்பல்கள் (Fly Ash) மற்றும் படிம சாம்பல்களை (Bottom Ash) தனது ஆபத்தான கழிவுகள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
  • ஆபத்தான கழிவுப் பொருட்களை (Hazardous Waste) முகாமை செய்தல், ஆபத்தற்ற கழிவுகளை (Non Hazardous Waste) முகாமை செய்தலை விட பாரதூரமான பாரிய ஒழுங்கு விதிகளுக்கு உள்ளாகும் ஒரு விடயமாகும்.
  • கட்டுமான தொழிற்துறையில் பயன்படுத்தப்படும் நோக்குடன் இந்த நிலக்கரிகளை விற்பனை செய்யும் அனுமதியினை வழங்கும் ஏற்பாடாக இந்த பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தோனேசியாவானது உலகில் நிலக்கரி உற்பத்தியாளர்களுள் உயர்ந்த இடத்தில் உள்ளதுடன் நாட்டுக்குத் தேவையான மின்சார அளவில் பெருமளவு படிம எரிபொருளினை பயன்படுத்தியே பெற்றுக் கொள்ளும் ஒரு நாடாகும்.

ஜகர்த்தா- செய்திகள் தெரிவிக்கும் விதத்தில் கூடிய மேற்பார்வையுடைய தொழிற்துறைகள் தொடர்பில் அனுமதி வழங்குவதை முன்னிட்டு இரசம், ஈயம் மற்றும் ஆசனிக் போன்ற பாரதுரமான உலோகங்கள் உள்ளடங்கும் நிலக்கரியினை இனியும் ஆபத்து விளைவிக்கக்கூடிய எரிபொருள் அல்ல என இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள புதிய அரசின் ஒரு விதியாக மின் சக்தி நிலையங்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப செயற்பாடுகள் தொடர்பில் மேற் கொள்ளப்படும் நிலக்கரி தகனத்தின் மூலம் உருவாகும் (Fly Ash) மற்றும் படிம சாம்பல்கள் (Bottom Ash) ஆகியன தீங்கிழைக்காத அல்லது செயலிழக்கப்பட்ட கழிவுகள் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விதி தொழில் உருவாக்கம் தொடர்பில் சர்வாதீகார சட்டம் என்றழைக்கப்படும் சட்டத்தின் வழித்தோன்றல்கள் ஆகும். “ கடந்த அக்டோபர் மாதத்தில் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறைகளுக்கு அமைய பேதங்களின் கீழ் பகுப்பாய்வு செய்யப்பட்டு இது “கனிய மற்றும் கழிவு சக்தி வலு“ தொடர்பில் துணை புரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான கழிவுப் பொருட்களை (Hazardous Waste) முகாமை செய்தல் ஆபத்தற்ற கழிவுகள் (Non Hazardous Waste) முகாமை செய்தலை விட பாரதூரமான பாரிய ஒழுங்கு விதிகளுக்கு உள்ளாகும்.

நிலக்கரி கழிவுகள் ஆபத்தான கழிவுகள் பட்டியலிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் பிரச்சினைக்குரியது. அது சுற்றாடல் மற்றும் பொது சுகாதாரத்தின் நிலைத்திருத்தலுக்கு ஒரு ஆபத்தான செய்தியாகும்.

மார்ச் மாதம் 10 ஆம் திகதி அறிக்கையொன்றை வெளியிட்டு சுத்தமான சக்தி வலுவினை பரந்தளவில் பயன்படுத்துதல் தொடர்பில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனமான ட்ரென்ட் ஏஷியா (Trend Asia) அமைப்பு தெரிவித்துள்ளது. அவர்கள் மேலும் தெரிவிப்பதாவது நிலக்கரி கழிவில் ஆசனிக் ஈயம் மற்றும் இரசம் குரோமியம் போன்ற இரசாயன பதார்த்தங்கள் காணப்படுவதால் அது சுற்றாடலுக்கும் மனிதர்களுக்கும் அதிகளவில் ஆபத்தானதாகும் என தெரிவித்துள்ளது.

நிகழ்காலத்தில் இந்தோனேசியாவில் மின் உற்பத்தியில் பெருமளவில் நிலக்கரி பயன்படுத்தப்படுவதுடன் குறைந்தது 2025 ஆம் ஆண்டு வரை சக்தி வலுவின் உச்சத்தை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றது.

ட்ரென்ட் ஏஷியா (Trend Asia) அமைப்பு தெரிவிப்பதாவது, அரசு ஆபத்தான கழிவுப் பொருட்கள் பட்டியில் பறக்கும் சாம்பல்கள் (Fly Ash) மற்றும் படிம சாம்பல்கள் (Bottom Ash) ஆகியன நீக்கப்படுவதற்கான தீர்மானம் 2020 ஆம் ஆண்டில் யூன் மாதம் தொழிற்சாலைகள் சங்கங்களால் மேற் கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி ஜெலோ விடோடோ வின் முன்னுரிமைப் பட்டியலில் நாடு முழுவதும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி காணப்படுகின்றமையினால் குறித்த குழுவானது நடைபாதையின் கற்கள் மற்றும் கொங்கிறீட் அமைப்பதற்கும் இந்த கட்டுமான பொருட்களுடன் கலப்பதற்கும் இந்த சாம்பல்களை மூலப்பொருட்களா பயன்படுத்த யோசனை முன்வைத்துள்ளனர்.

இந்தோனேசிய நிலக்கரி அகழ்வு சங்கம் (APBI – Indonesian Coal Mining Association) இந்தோனேசிய பாம் எண்ணெய் சங்கம் (GAPKI – Indonesian Palm Oil Association), இந்தோனேசிய கூழ் மற்றும் கடதாசி சங்கம் (APKI – Indonesian Pulp and Paper Association) மற்றும் இந்தோனேசிய ஆடைத் தொழிற் சங்கம் (API – Indonesian Textile Association) உள்ளிட்ட தொழிற் சங்கங்கள் சில இந்த பறக்கும் சாம்பல்கள் (Fly Ash) மற்றும் படிம சாம்பல்கள் (Bottom Ash) ஆகியவற்றை மீண்டும் வகைப்படுத்துமாறு கோரியுள்ளன. இந்த சங்கங்களில் சில சங்கங்கள் நிலக்கரி சாம்பல் ஆபத்தானது என வகைப்படுத்தலினூடாக கழிவுகளை மீள பயன்படுத்துவது தொடர்பில் விற்பனை செய்யும் செயன்முறைக்கு தடையாக அமையும் என தெரிவித்துள்ளனர். மேலும் அதன் விளைவாக வருடாந்தம் நிலக்கரி மெட்ரிக் தொன் 10 அளவில் குவிவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கற்கையொன்றிற்கமைவாக க்ரீன் பீஸ் (Greenpeace) நிலக்கரி நிலையங்களின் ஊடாக வெளியிடப்படும் PM 2.5 என அழைக்கப்படும் நுண் துணிக்கைகளை சுவாசிப்பதால் இந்தோனேசியா முழுவதம் 03 மில்லியனுக்கும் அதிகளவான சனத்தொகை உலக சுகாதார அமைப்பின் நியமங்களைக் கடந்து செல்லக்கூடிய நிலையினை எட்டக்கூடும் என எச்சரித்துள்ளது. அவ்வாறான நுண் துணிக்கைகளை தொடர்ந்தும் சுவாசித்தல் பாரதூரமான சுவாச நோய்கள் மற்றும் இதய நரம்புகள் தொடர்பிலான நோய் நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.

இந்தோனேசியா நிலக்கரியினை தனது பொருளாதார மேம்பாட்டு தொடர்பில் பயன்படுத்துவது பொருளாதார மற்றும் சுற்றாடல் தொடர்பில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்பார்க்கப்படும் அனவினைக் விட மின்சாரத்துக்கான கேள்வி குறைவடைதல், அதிகரிக்கும் செலவு மற்றும் நிதியியல் பொறுப்பு அரசுக்கு காணப்படும் நிதி பயன்பாடு மற்றும் நிதி அளவினை சிக்கல் நிலைமைகளை நோக்கி இட்டுச் செல்லும். நிலக்கரி சுரங்கங்கள் மூலம் இந்த தீவுக்கூட்டங்களில் சில மழைக்காடுகள் அழிவடைந்து பெருமளவிலான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதுடன் நிலக்கரி நிலையங்களால் ஏற்படும் சூழல் மாசடைதலானது மில்லியன் அளவிலான மக்களுக்கு உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது.

பெஸ்டன் கொகொனினால் 2021 மார்ச்ச மாதம் 11 ஆம் திகதி மொங்கபே/Mongabay இணையதளத்திற்கு ” Never mind the mercury: Indonesia says coal ash isn’t hazardous ” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்