மனித செயற்பாட்டினால் உருவாக்கப்படும் இவ்வாறான ஒலி வகைகள், தவளைகளின் இனச்சேர்க்கை வெற்றிவீதம் மற்றும் அதன் உயிரினக்குடும்பத்தின் உயிர்வாழ்வுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
பெண் தவளைகள் வாகனங்களால் ஏற்படுத்தப்படும் சத்தத்திலிருந்து திசைதிருப்பப்பட்டு தவறான ஆண்களைத் தேர்ந்தெடுக்கும். இது, அதன் இனப்பெருக்கம் மற்றும் மனித நடமாட்டம் அதிகம் உள்ள நகர்ப்புற வாழ்விடங்களில் வாழும் தவளைகளின் உயிர்க்குடும்பத்தின் தொடர்ச்சியில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் (Sunshine Coast ) பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், ஒரு முறை கீழைத்தேய ஆண் செட்ஜ் (Sedge) இன தவளைகளுக்கு போக்குவரத்து சத்தங்களுடன் கூடிய பின்னணி இசை மற்றும் ஒரு முறை இல்லாமலும் இசைக்கவிட்டு ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர்.
கீழைத்தேய செட்ஜ் இனத் தவளைகள் வடக்கு குயின்ஸ்லாந்தில் (Queensland) இருந்து தெற்கு நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) வரை உள்ள புறநகர் குளங்களில் காணப்படுகின்றன என்று பல்கலைக்கழகத்ம் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிடுகின்றது.
பின்னணியில் போக்குவரத்து சத்தம் இருக்கும்போது பெண் தவளைகள் அழகற்ற அழைப்புகளை நோக்கி ஈர்க்கப்பட்டனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
ஒரு பெண் தவளையின் சந்ததியினரின் தரம் சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்தது என்பதால் இது குறிப்பாக கவலை தரும் விடயமாக இருந்தது.
கீழைத்தேய செட்ஜ் பெண் தவளைகளைப் பொறுத்தவரையில், அதிக ஒலி மற்றும் வேகமான ஒலிகளை உருவாக்கும் ஆண்களை அவை தேர்ந்தெடுத்தன. இவ்வாறான தெரிவுக்கு ஆண் தவளைகள் சிறந்த ஆரோக்கியமும் சிறப்பான மரபணுக்களையும் கொண்டிருக்க வேண்டும்.
கீழைத்தேய பெண் செட்ஜ் தவளைகளின் மோசமான தேர்வுகளுக்கான காரணங்கள் தெளிவாக இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆனால் வாகன சத்தத்தால் அதிகரித்த மன அழுத்தம் காரணமாக அவை செய்யப்பட்டிருக்கலாம். இது, நல்ல இனச்சேர்க்கை முடிவுகளை எடுக்கும் பெண் தவளைகளின் திறனை பாதித்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.
தவளைகளின் இனச்சேர்க்கையின் வெற்றி தொடர்பாக ஒலி காட்சிகளை மாற்றுவதில் மானுடவியல் காரணிகள் எவ்வாறு பங்கு வகிக்கின்றன என்பதை அறிய மேலும் ஆராய்ச்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தவளை இனங்கள் ஏற்கனவே நோய், வாழ்விட இழப்பு மற்றும் பிற காரணிகளால் உலகளவில் பெரும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.
சமீபத்திய ஆண்டுகளில், ஆம்பிபியன் சைட்ரிட் ( amphibian chytrid fungus) எனப்படும் ஒரு பூஞ்சை பல தவளை இனங்களை தாக்கியுள்ளது. இது நீர்வாழ் தவளை இனங்களின் தோல்களைத் தாக்குவது மட்டுமின்றி , இதன் மூலம் சுவாசித்தல், உறிஞ்சுதல் போன்ற பல செயல்பாடுகளை செய்கிறது.
ஆக்டா எத்தோலாஜிகா (Acta Ethologica) என்ற அறிவியல் இதழின் ஆகஸ்ட் 5, 2021 பதிப்பில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
Down To Earth இணையத்தளத்தின் எழுத்தாளர் குழாமினால் “ Traffic noise can distract female frogs, lead them to select wrong mates: Study” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.