டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான (Centre for Science and Environment) இலாப நோக்கற்ற மையத்தின் பகுப்பாய்வின்படி, 10 மாத கால உத்தரவு இருந்தபோதிலும், நாட்டின் பல தொழிற்சாலைகள் மத்திய நிலத்தடி நீர் ஆணையத்திலிருந்து- (CGWA) அனுமதி பெறாமல் நிலத்தடி நீரைப் பிரித்தெடுக்கின்றன.
பெரும்பாலான இந்திய தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் மிகவும் நம்பகமான, மலிவான ஓர் ஆதாரமாகும். நாடு முழுவதும் உள்ள மற்றைய தொழில்துறைகள் கூட ஆழ் துளைக்கிணறுகளுக்கான தடையில்லா சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் தண்ணீராய் உறிஞ்சி எடுக்கின்றன.
எனவே, CGWA, நீர் பிரித்தெடுத்தலை நிர்வகிக்கவும் மற்றும் நாட்டில் உள்ள நிலத்தடி நீர் சொத்தை கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
செப்டம்பர் 24, 2020 அன்று, CGWA, 22 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள தொழிற்சாலைகள் தங்கள் திட்டங்களுக்காக நிலத்தடி நீரை வெளியேற்றுவதற்கான ‘தடையில்லா சான்றிதழ்’ பெற நீர் கணக்கீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தியது.
இதன்படி, பால், சர்க்கரை, பானங்கள் மற்றும் வடிசாலைகள் போன்ற நிலத்தடி நீரை சட்டவிரோதமாக பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகள் தங்கள் நீர் தணிக்கை ஆவணங்களை CGWA க்கு சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் நிலத்தடி நீர்மட்டம் குறித்த தரவுகளை CGWA வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வது மற்றும் மீள் நிரப்பு செய்யப்பட்ட அளவை பதிவு செய்வது கட்டாயமாகும் என்று இந்திய தொழில் கூட்டமைப்பின் நீர் தணிக்கையாளர் கூறினார். “இருப்பினும், பல தொழிற்சாலைகள், இந்தத் தகவல்களை தருவது தொடர்பில் பின்னடிக்கின்றன.”
“நிலத்தடி நீர் மறுசீரமைப்பு கட்டணத்தை செலுத்துவதை தவிர்க்க தொழிற்சாலைகள் நீர் நுகர்வு தரவைத் தர மறைக்கின்றன. மிகவும் திறமையான தொழிற்சாலைக்குக்கூட அடுத்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்சம் 20 சதவிகிதம் நிலத்தடி நீர் பயன்பாட்டைக் குறைப்பது பெரிய சவாலாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
துறைசார் வல்லுனர்களின் கூற்றுப்படி, இந்த பரவலான இணக்கத்திற்குப் பின்னால் திறன் இடைவெளி ஒரு முக்கிய காரணியாகும். அனைத்துத் தொழிற்சாலைகளையும் அவற்றின் திட்டங்களையும் உள்ளடக்க இந்தியாவிற்கு ஒரு பெரிய கணக்கீட்டு முகவர் வலையமைப்பு தேவையாகும்.
“குறிப்பிட்ட நீர் நுகர்வு மற்றும் பிற நீர் தொடர்பான தரவுகளைப் புகாரளிப்பதற்காக மாநிலங்கள் முழுவதிலும் உள்ள அனைத்து ஆலைகளும் ஒரே மாதிரியான வடிவத்தைப் பின்பற்றுவதை தொழிதொழிற்சாலைகள் உறுதி செய்ய வேண்டும்” என்று நீர் தணிக்கை நிபுணர் கூறினார்.
நீர் ஓட்ட மீட்டர்களை அவ்வப்போது அளவீடு செய்வது மற்றும் ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு அளவீட்டு அறிக்கையை சமர்ப்பிப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Down To Earth இணையத்தளத்தில் திவ்யான் உபத்யே – Divyansh Upadhyay இனால் ஜூலை 26ம் திகதி வெளியான “Industries rampantly flout new groundwater rules 10 months after notification” என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.