பிளாஸ்டிக் துகள் (Nurdle) என்பது நாம் அன்றாடம் பாவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் குண்டுமணி அளவுள்ள உருண்டை வடிவிலான ஓர் மூலப்பொருள் ஆகும்.

2017இல் ஒக்டோபர் மாதத்தில் வீசிய புயல் காரணமாக தென்னாபிரிக்காவின் டேர்பன் துறைமுகத்தில் தரித்து நின்ற இரு பாரிய கொள்கலன் கப்பல்கள் மோதியபோது பல்லாயிரம் தொன் நிறை மதிப்புள்ள பிளாஸ்டிக் துகள்கள் கடலுக்குள் வீசப்பட்டு பாரிய சுற்றுச்சுழல் அனார்த்தம் ஒன்று ஏற்பட்டது.

கடல் காற்று மற்றும் கடலின் நீரோட்டங்கள் இச்சிறிய துகள்களை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலுள்ள கடற்கரைகளை எடுத்துகிசென்றது மட்டுமின்றி இதன்னை கடற்கரை மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதை ஒரு சவாலான செயலாக மாற்றியுள்ளது. இத்துகள்களை முற்றாக சூழலிருந்து அகற்றுவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்கள் எடுக்கும் என்று சூழலியலாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

இது Mongabay இணையத்தளத்தில் வெளியான காணொளி சம்பந்தமான ஓர் சிறு குறிப்பு ஆகும்.