ட்ரோன்கள்(Drones) மற்றும் கமராக்களுடன் கொழும்பில்  இருந்து தங்களை பறவைக் கண்காணிப்பாளர்கள் என்று அழைத்துக்கொள்பவர்களின் பொறுப்பற்ற நடத்தையானது, மன்னாருக்கு விஜயம் செய்யும் தனித்துவமான வெளிநாட்டுப்பறவைகளின் தொடர் தங்கலுக்கும் அவற்றின் எதிர்கால இடம்பெயர்வுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதென  வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் (Wildlife and Nature Protection Society- WNPS) குற்றம் சாட்டியுள்ளது.

பருவகாலங்களில் மன்னாருக்கு விஜயம் செய்யும் பெரும்பாலான புலம்பெயர் பறவைகள் பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து பறந்து உணவுக்காகவும் மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் இங்கு வந்து சேர்கின்றன.

இவற்றில் கடல் நீரேரிகளைச்சுற்றி வலம் வரும் ஃபிளமிங்கோக்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. அவை உப்புநீரை வடிகட்டுவதன் மூலம் செழித்து வளரும் இறால்களை குறிவைக்கின்றன.

கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும், புதிய பறவை இனங்கள் இங்கு இனங்கண்டு கொள்ளப்படுகின்றன; அவை உள்ளூர் பறவையியல் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கும் இந்த நாட்டிற்குத் தேவையான அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருக்கிறது.

இப்பறவைகள் அதிகாகத் தென்படும் பிரதேசமானது உயர்-பாதுகாப்பு வலயமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், ரேடார் மூலம் கண்டறியப்படுவதைத் தவிர்ப்பதற்காக இந்த ட்ரோன்கள் குறைந்த உயரத்தில் பறக்கவிடப்படுகின்றன என்று WNPS கூறுகிறது.

இது, நிச்சயமாக, உணவளிக்கும் பறவைகளுக்கு இன்னும் அதிக தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. ட்ரோன் சத்தம் மற்றும் அவற்றின் வான்வழி இரைதேடும் மற்றைய பறவைகளின் ஒற்றுமை, இந்த இனங்களுக்கு பெரும் இடைஞ்சலை ஏற்படுத்துகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

 “அப்பறவைகள் இப்பிரதேசத்திலிருந்து  வெளியேறினால், அவை மீண்டும் ஒருபோதும் இங்கு திரும்பி வர மாட்டா, கொழும்பில் இருந்து வரும் உள்ளூர் சுற்றுலா பயணிகளின் பொறுப்பற்ற தன்மைக்கு கொடுக்கும் விலையாக இது அமையும் ,“ என்று WNPSஇன்  அறிக்கை கூறுகிறது.

தெற்கின் ஊவா மாகாணத்தில் உள்ள லுணுகம்வெஹெர (Lunugamvehera) நீர்த்தேக்கத்தின் திசைமாறிய நீரோட்டத்தால் புந்தல தேசிய பூங்காவின் (Bundala National Park) நீரின் உப்புத்தன்மை நீர்த்துப்போனபோது, ​​பிளமிங்கோக் கூட்டங்களும் பிற இனங்களும் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்ததையும் WNPS சுட்டிக்காட்டியது.  “நாங்கள் அவர்களை துன்புறுத்தினால், ஏற்கனவே அவை புலம்பெயர்ந்ததுபோல, இந்த வழியில், அவர்கள் இந்த நாட்டிற்கு வெளியே இன்னும் வடக்கு நோக்கிச் செல்வார்கள், ”