- நீரொரு பெறுமதியான வளமாகக் காணப்பட்டாலும் அது பற்றாக்குறையாகக் காணப்படும் சந்தர்ப்பத்திலேயே அதன் அருமை பெரிதும் விளங்குகின்றது. இந்து குஷ் இமயமலை வலயத்தில் வெப்பநிலை அதிகரிப்பதால் பனிப்பாறைகள் கரைந்து நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் நிலை காணப்படுகின்றது.
இன்று மார்ச் 22 உலக நீர்த்தினத்தை கொண்டாடும் நிலையில் இந்து குஷ்; ஹிமாலயா வலயம் பெரும் சவாலை எதிர் நோக்கியுள்ளது. அந்த சவால் உயிரினங்களுக்கும் ஏனைய தாவரங்களுக்கும் உயிர்ப்பான சூழல் முறைமைக்கும் நீர்த்தட்டுப்பாட்டை ஏற்படுத்தவள்ளதாகக் காணப்படுகின்றது. “ நீரின் பெறுமதியினை மதீப்பீடு செய்தல்” இதுவே இந்த ஆண்டின் உலக நீர்த்தினத்தின் கருப்பொருளாகும். எமக்கு அருமையான வளமாகக் காணப்படும் நீரின் பெறுமதியினை எவ்வாறு உறுதி செய்வது?
இந்து குஷ் ஹிமாலயா வலயம் – ஆப்கானிஸ்தான், சீனா, இந்திய, நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் அமைந்நிருக்கின்ற மலைத்தொடர்; பிரதேசமாகும். இப்பிரதேசமானது ஆசியாவின் நீர்க்கோபுரம் என்றும் வர்ணிக்கப்படுகின்றுது. இந்த மலைத்தொடரிலிருந்து வழிந்தோடும் நீர் மற்றும் பனிப்பாறைகள் கரைந்து செல்வதால் தென்கிழக்கு மற்றும் கிழக்காசியவில் காணப்படும் 10 ஆறுகள் போூசிக்கப்படுவதுடன் 240 மில்லின் மக்களுக்கு இதன் மூலம் நீர்; கிடைக்கின்றது. அவ்வாறே தாழ் நில் நீரேந்து வலயத்தில் 1.65 பில்லியன் மக்களுக்கும் இதன் மூலம் நீர்; பெற்றுக்கொடுக்கப் படுகின்றது.
நீர் கிடைக்கின்ற ஈரவலயம் மற்றும் இந்து குஷ் ஹிமாலயா வலயத்தில் காணப்படுகின்ற நம்ப முடியாதளவிலான உயிர்ப்பல்வகைமையினை பேணிப்பாதுகாப்பதற்கு இந்த நீரின் பங்கு மிகவும் அத்தியாவசியமானதாகக் காணப்படுவதுடன் இதனைக் கடந்து தேசிய மற்றும் நாகரீக நீர் வழங்கல்இ தூய்மைப்படுத்தல்கள், நீர்ப்பாசன நடவடிக்கைகள், நீர்மின் மற்றும் சுற்றுலா துறை நடவடிக்கைகளுக்கும் இது மிகவும் அத்தியாவசியமானதாகக் காணப்படும் இந்து குஷ் ஹிமாலய நீரின் பெறுமதி விலைமதிப்பற்றது இருப்பினும் இன்னும் இந்நீரின் வளம் தொடர்பில் அறியாமலேயே பலர் செயற்படும் நிலைக் காணப்படுகின்றது.
பொருளியலாளர்கள் மற்றும் நீர்வள முகாமையாளர்கள் நீரினை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் பெறுமதி தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்கு முயற்ச்சிக்கின்றனர். நீரின் பொருளாதாரப் பெறுமதி அதன் கேள்வி அதிகர்ப்பதனூடாகவே ஏற்படுகின்றது. அந்தக்கேள்விக்கு நிரம்பல்; செய்யும் வகையில் நீர் முகாமையாளர்கள் உரிய நேரத்திற்கு உரிய இடத்திற்கு எதிர்பார்க்கப்படும் நீர் அளவினை சிறந்த தரத்திலும் போதிய அளவிலும் அதனை வழங்க செயற்படுகின்றனர்.
ஒரு அலகு நீரின் பொருளாதாரப் பெறுமதி அதிகரிப்பதென்பது நீர் வழங்கள் குறைவடைவதாலோ கேள்வியில் போட்டித்தன்மை ஏற்படும் சந்தர்ப்பத்தில் பொருளாதார ரீதியாக பார்க்குமிடத்து நீர் முகாமையாளர்கள் கேள்வியினூடாக நீரினை ஒதுக்கும் செயற்பாடுகளை சமநிலைப்படுத்த முயற்சித்து ஒவ்வொரு அலகிற்கும் உயரிய பொருளாதாரப் பெறுமதி காணப்படுகின்ற பயன்பாடுகள் தொடர்பில் பெருமளவிலான நீரினை வழங்குவதை நோக்கமாக் கொண்டுள்ளனர். சில பயன்பாடுகளின் போது நீரின் பெறுமதி ஒவ்வொரு உற்பத்தி தொடர்பாகவும் பயன்படுத்தப்படும் நீரின் அளவு மற்றும் உற்பத்தியின் செயற்றிறன் தொடர்பாகவும் கருத்து தெரிவிக்க முடியும்.
இருப்பினும் ஒரு அளவிலான நீர் “நேர் மறையாக”; காணப்படும் உற்பத்தி செயன்முறை மற்றும் செயற்றிறனான பயன்பாட்டுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாகக் காணப்பட வேண்டியதில்லை ஏனெனில் நீரின் அளவு அதிகரிப்பதனூடாகவோ அல்லது நீர் மாசடைவதால் ஏற்படும் செலவு அல்லது பாதிப்பினை பரிசீலித்துப் பார்க்கும் பெறுமதி மறைப்பெறுமதியினைக் கொள்ள முடியும். உதாரணமாக மழைக்காலங்களில் ஆறு மற்றும் சமதரை பகுதிகளில் ஏற்படும் பரந்த வெள்ளநிலைமை இந்து குஷ்; ஹிமாலயா வலயத்தினை ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவானதாகக் காணப்பட்டாலும் அதனால் ஏற்படுத்தப்படும் தாக்கம் மிகவும் கூடுதலாகவே காணப்படுகிறது. வட இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் மற்றும் உட்கட்டமைப்பு நீரினால் ஏற்படுத்தப்பட்ட அழிவை மிகவும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
எண்ணிக்கை போதுமானதாக காணப்படாத நிலை
இந்து குஷ்; ஹிமாலயா வலயத்தில் நீரின் பெறுமதி தொடர்பாக தரவுகள் தொடர்பில் பதிலளிக்கும் போது அது பெறும்பாலானோருக்கு கடினமானதாகவே காணப்படுகிறது. ஏனெனில் நீரின் பெறுமதி தொடர்பில் காணப்படுகின்ற பெரும்பாலான வரைவிலக்கணங்கள் பொருளாதார பிரிவினை விட தனது தனிப்பட்ட அபிப்பிராயங்களின் அடிப்படையிலேயே காணப்படுகின்றன. பெரும்பாலும் நாங்கள் எமது நாளாந்த நீரின் தேவையை ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் மாத்திரமே நீரின் பெறுமதியை உணருகின்றோம். உதாரணமாக நகரத்தின் நீர் வழங்கள் தடைபடும் போதும், எமது நீர் தாங்கி வெற்றாக காணப்படும் போது, அவ்வாறே தெளிவான சுத்தமான நீர் நிறைந்த ஓடைகள் குப்பைகூளங்கள் நிறைந்து மாசடைந்து அதன் நிறம் மாறி எமக்கு நீர் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகும் போதும் எமக்கு நீரின் பெறுமதி வெகுவாகத் தெரிகின்றது.
தனிநபர்களாக அல்லது ஒரு சமூகமாக நீரின் பெறுமதியை விளங்கிக் கொள்ளும் தேவைப்பாடு காணப்படுகின்றது. ஏனெனில் தற்போது காணப்படுகின்ற பாரிய காலநிலை மாற்றங்கள் எமக்கு அந்த நிலையை தோற்றுவிக்கின்றன. சமதரை பிரதேசங்களை பார்க்கிலும் வேகமாக மலைப்பகுதிகளின் வெப்பநிலை அதிகரித்துச் செல்லும் நிலை தற்போது காணப்படுகின்றது. இந்து குஷ்; ஹிமாலயா வலயத்தில் மலைகளில் காணப்படுகின்ற நீரூற்றுக்கள் வற்றிப்போகும் நிலை மற்றும் சூழல் முறைமையில் உயிரியல் இரத்த ஓட்டம் காய்ந்து போகும் நிலை காணப்படுவதோடு அது வலயத்தின் மத்தியில் மலைகளின் வாழக்கை முறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆறுகளுக்கு வருடம் முழுவதும் நீரை வழங்குகின்ற பனிப் பாறைகள் வேகமாகக் கரைந்து செல்வதனூடாக கிட்டிய எதிர்காலத்தில் ஆறுகளில் நீரோட்டம் வெகுவாக அதிகரிக்கும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. அதனூடாக சமதரைகளில் வாழூகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கு நீர் வளங்கள் அற்றுப்போகும் நிலை ஏற்படக்கூடும்.
2021 ஆம் ஆண்டில் நீர் தினத்தில் இந்து குஷ்; ஹிமாலயா வலயத்தில் காணப்படுகின்ற சவால்களாவது நாளார்ந்த தேவைகளுக்கு மற்றும் உயிர்;ச் சூழல் முறைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நீர் ஆற்றுகின்ற முக்கியமான பங்கு தொடர்பில் மீண்டும் ஒரு முறை பரிசீலித்துப் பார்ப்பதாகும். ஏனெனில் நீரொரு அருமையான வளமாவதோடு நாங்கள அதனை ஒரு வளமாகக் கருதிச் செயற்பட வேண்டும்.
ரென்டோல் ரிட்செமாவினால் மூன்றாவது துருவம் (The Third Pole) இணையத்தளத்திற்கு மார்ச் 23ஆம் திகதி எழுதப்பட்ட ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு. மூலம்
Comments are closed for this post.