சில வகையான பவளப்பாறைகள் மற்றும் அனிமோன்களில் (Anemones)
சிறப்பு நோயெதிர்ப்பு கலங்கள் உள்ளன, என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. கடல் உயிரின அமைப்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உயிரினங்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த செல்கள் உதவுகின்றன.

கடல் அனிமோன்கள் (Anemones) ஆனது ஆக்டினேரியா (Actiniaria) வரிசையின் கடல்பிராணிகளை உட்க்கொள்ளும் விலங்குக் குடும்பத்தை சேர்ந்தவையாகும்.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாகோசைடிக் (phagocytic) கலங்கள் காலிஃப்ளவர் (cauliflower) காணப்படும் பூக்கோசு, பவளம் மற்றும் ஸ்டார்லெட்(starlet ) கடல் அனிமோன் என்பன Rosenstiel School of Marine and Atmospheric Science, மியாமி பல்கலைக்கழகம் (University of Miami) மற்றும் நெகேவின் பென் குரியன் பல்கலைக்கழக (Ben Gurion University) விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டன.

இந்த உயிரினங்களின் மொத்த கலங்களின் தொகையில் குறைந்தது மூன்று சதவிகிதம் பாகோசைடிக் (phagocytic) ஆகும், இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.

நோயெதிர்ப்பு செல்கள் பாகோசைடோசிஸ் (phagocytosis) எனப்படும் ஒரு செயல்முறையின் மூலம் வெளியில் உள்ள மற்றும் சேதமடைந்த செல்களை உட்கொண்டு அழிக்கின்றன.

யுஎம் ரோசென்ஸ்டியல் பீடத்தின் (UM Rosenstiel School) கடல் உயிரியல் மற்றும் சூழலியல் உதவி பேராசிரியரும் ஆய்வின் இணை ஆசிரியருமான நிக்கி ட்ரேலர்-நோல்ஸ் (Nikki Traylor-Knowles) கூறுவது என்னவெனில்:

“காலநிலை மாற்ற நெருக்கடி உலகளாவிய பவளப்பாறை உயிரினங்கள் மற்றும் உலகளாவிய பன்முகத்தன்மையை கடுமையாக குறைப்பதால், பவளக் கலங்கள் எவ்வாறு தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவது போன்ற சிறப்புச் செயல்பாடுகளைச் செய்கின்றன என்பதைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எங்கள் கண்டுபிடிப்புகள் பவளப் பாறைகளின் ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான கண்டறியும் கருவிகளின் வளர்ச்சிக்கு உதவும்,” என்று கூறினார்.

ஆய்வு செய்யப்பட்ட இரண்டு உயிரினங்களில் பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பிற வெளிநாட்டு துகள்கள் (ஆன்டிஜென்ஸ்-antigens) அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் விஞ்ஞானிகள் பல்வேறு வகையான உயிரணுக்களை தனிமைப்படுத்தினர்.

பாகோசைடோசிஸ்(Phagocytosis) தனித்துவமான நோயெதிர்ப்பு உயிரணுக்களில் காணப்பட்டது, அவை ஆன்டிஜென்கள் மற்றும் உயிரினங்களின் சேதமடைந்த செல்களை உறிஞ்சி ஜீரணிக்கின்றன. இந்த நோயெதிர்ப்பு உயிரணுக்களில் குறைந்தது இரண்டு கலங்களின் கூட்டங்கள் அடையாளம் காணப்பட்டன.

ஆய்வின் நோக்கம் பவள வெளுத்தலின்(bleaching) தாக்கத்தை உள்ளடக்கவில்லை (பாசியை-algae வெளியிடுவதன் மூலம் பவளங்கள் வெதுவெதுப்பான நிலையில் வெள்ளை நிறமாக மாறும்). இருப்பினும், உயிரினங்கள் வெளுத்தல் செயல்பாட்டின் போது சேதமடைந்த செல்களை உறிஞ்சி உடகொண்டதனை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்தனர்.

இந்த ஆய்வு, ஹெக்ஸகோராலியா பாகோசைடிக் (Hexacorallia Phagocytic Cells) கலங்களின் செயல்பாட்டு குணாதிசயம் ஜூலை 26 ஆம் தேதி Frontiers of Immunology என்னும் இதழில் வெளியிடப்பட்டது.

Down To Earth இணையத்தளத்தின் எழுத்தாளர் குழாமினால் ஆகஸ்ட் 18ம் திகதி  “Immune cells isolated in sea corals, anemones for the 1st time” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்