லத்தீன் அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் பசிபிக் கடற்பிராந்தியங்களில்  மகரந்தச் சேர்க்கை சார்ந்த பயிர்களின் மகசூலில் உறுதியற்ற தன்மை ‘தீவிரம்’ அல்லது ‘அதிக ஆபத்து’

தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், வெளவால்கள் போன்றவற்றின் எண்ணிக்கைக்குறைவால் ஆபிரிக்கா உள்ளிட்ட உலகின்  பல வளந்துவரும் நாடுகளில் பல்லுயிரியல் ஆபத்தை எதிர்கொள்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

மகரந்தச் சேர்க்கைகளில் ஈடுபடும் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட  வியத்தகு வீழ்ச்சியின் காரணங்கள் மற்றும் விளைவுகள் குறித்த ஒரு பூகோள ஆபத்து ஆய்வு, ஆப்பிரிக்கா, ஆசிய-பசிபிக் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை மணியாக  அமைந்தது. 

இது வாழ்வாதாரங்களில் ஒரு இருண்ட நிழலைக் கொண்டுள்ளது: குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கிராமப்புற மக்கள் காட்டில்  வளரும் உணவுகளைச் சார்ந்துள்ளனர். மேலும் மகரந்தச் சேர்க்கைகளின் இழப்பு காட்டுத்  தாவரங்கள் மற்றும் பழங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளிலுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் நல்வாழ்வை வழங்கும் ‘சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள்’ மற்றும் பல பில்லியன் டாலர்கள் பெறுமதியான பயிர் உற்பத்தித்திறன், இந்த குறைந்து வரும் போக்கால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், வெளவால்கள் போன்றவற்றின் எண்ணிக்கைக்குறைவால் ஆபிரிக்கா உள்ளிட்ட உலகின்  பல வளந்துவரும் நாடுகளில் பல்லுயிரியல் ஆபத்தை எதிர்கொள்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில், இந்த ஆபத்து ‘மிதமானது’. ஏனென்றால், மகரந்தச் சேர்க்கையை நம்பியிருக்கும் பயிர்கள் பரவலாக வளரவில்லை மற்றும் இந்த பிராந்தியங்களின் மொத்த விவசாய உற்பத்திக்கு முக்கியத்துவம்குறைவாக உள்ளது. 

சர்வதேச விஞ்ஞானிகள் குழுவின் ஆராய்ச்சிக்  கட்டுரையானது  Nature Ecology & Evolution இதழில் ஆகஸ்ட் 16, 2021 இல் வெளியிடப்பட்டது.

முக்கியமான இருப்பு

உணவு மற்றும் விவசாய அமைப்பின் அறிக்கையின்படி, முதுகெலும்பில்லாத மகரந்தச் சேர்க்கை இனங்களில், குறிப்பாக தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் சுமார் 40 சதவீதம் அழிவை எதிர்கொள்கின்றன. 

காட்டு மகரந்தச் சேர்க்கையின் பன்முகத்தன்மை இழப்பு மற்றும் பயிர் மகரந்தச் சேர்க்கை பற்றாக்குறை ஆகியவை ஆய்வில் உள்ளடக்கப்பட்ட ஆறு பகுதிகளிலும் கடுமையான அபாயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இது குறிப்பாக ஆபிரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கு மிகவும்  அக்கறைப்பட வேண்டிய விடயமாக உள்ளது ஏனெனினல், மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பயிர்கள் வாழ்வாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு குறிப்பிடத்தக்க ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார மதிப்பைக் கொண்டுள்ளன.

லத்தீன் அமெரிக்காவில் தேன் மற்றும் காட்டு பழங்கள் போன்ற மரம் அல்லாத பொருட்களின் சரிவு இப்பகுதியை ஆபத்தில் ஆழ்த்துகிறது. இக்கண்டமானது வாழ்வாதார விவசாயம் மற்றும் இயற்கை வளங்களை நம்பியுள்ள பல்வேறு வகையான பழங்குடி மக்களைக் கொண்டுள்ளது.

ஆய்வுக்கு தலைமை தாங்கிய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையைச் சேர்ந்த லின் டிக்ஸ் (Lynn Dicks) கூறியாது என்னெவெனில்: 

“மகரந்தச் சேர்க்கைகளுக்கு என்ன நடக்கிறது என்பது மனிதகுலத்திற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சிறிய உயிரினங்கள் உலகின் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இதில் மனிதர்களும் மற்ற விலங்குகளும் இவற்றின் ஊட்டச்சத்தை நம்பியுள்ளன. அவைகளை நாம் இழந்தால்,, நாங்கள் கடுமையான சிக்கலை  எதிர்நோக்கவேண்டி  இருக்க வேண்டி வரும்,” என்று கூறினார்.

பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் பற்றிய அரசாங்கங்களுக்கிடையிலான அறிவியல் கொள்கை தளத்தின் 2016 மதிப்பீட்டு அறிக்கையின் படி, இந்த கண்டுபிடிப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, ஏனெனில் மகரந்தச் சேர்க்கை சார்ந்த உணவு உற்பத்தி கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

மகரந்தச் சேர்க்கை இழப்பின் விளைவாக உற்பத்தி செய்யப்படும் உணவு, நார், எரிபொருள் அல்லது விதைகளின் அளவு அல்லது அவற்றின் தரத்தில் குறைவு என்பன , ஆய்வில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்ட மற்றொரு உலகளாவிய ஆபத்து ஆகும். 

காலநிலை மாற்றம் சரிவை மேலும் மோசமாக்கும்

வாழ்விடங்களை அழித்தல், முறையற்ற நிலப்பயன்பாடு, மேய்ச்சல், உரங்கள் மற்றும் ஏகப்பயிர் விவசாய வளர்ப்பு, அதிக பூச்சிக்கொல்லி பயன்பாடு ஆகியன  மகரந்தச் சேர்க்கைகள் குறைவதற்கு முக்கியக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

பூக்கும் தாவரங்கள், அவற்றின் மகரந்தச் சேர்க்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை நிறுவும் வண்ணம் அறிவியல் சான்றுகள் உள்ளன.

காலநிலை மாற்றம் மகரந்தச் சேர்க்கைகள் குறைவதற்கு நான்காவது காரணமாக அமைந்துள்ளது.. எவ்வாறாயினும், இது குறித்த தரவு குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தீவிர மழை மற்றும் வெப்பநிலை போன்ற தீவிர காலநிலை மாற்றங்கள் ஏற்கனவே பயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன. மகரந்தச் சேர்க்கைகளின் இழப்பு தற்போதுள்ள நெருக்கடியை மேலும் அதிகரிக்கிறது என்று, டிக்ஸ் கூறினார்.

வரவிருக்கும் தசாப்தங்களில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்க, மகரந்தச் சேர்க்கை வீழ்ச்சியின் பிற இயக்கிகளுடன் தொடர்பு கொள்ள வாய்ப்புள்ளது என்று  ஆய்வு கூறுகிறது. 

மகரந்தச் சேர்க்கை ஆராய்ச்சி, பாதுகாப்பு உத்திகள் மற்றும்  காலநிலை மாற்றத் தணிப்பு மற்றும் தகவமைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில்  ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

Down To Earth  இணையத்தளத்தில் கிரண் பாண்டே (Kiran Pandey) என்பவற்றினால்  “Why the Global South needs birds and bees more than the North” என்னும் தலைப்பில் எழுதி ஆகஸ்ட் 18ம் திகதி வெளியான  கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூலம்