விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத் துறையில் ஏறபட்டுள்ள முன்னேற்றங்களின் விளைவக நாளுக்கு நாள் உலகு கொங்கிறீட்டுக்களின் சுவர்கமாக மாற்றமடைதலானாது மனிதனுக்கும் சூழலுக்குமிடையில் காணப்படும் தொடர்புகளை நாளுக்கு நாள் பினநோக்கி நகர்த்துகின்றது. இருப்பினும் இயற்கைச் சூழலின் பெறுமதி எவ்வளவு அத்தியாவசியமென்பது மனித மனதில் வேரூன்றிச் செல்வதற்கு அவ்வளவு காலம் எடுக்கவில்லை. ஏனெனில் மனிதனிள் உயிர் நாடி இயற்கைச் சூழலாகும் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் வாயு, உயிர் காக்கும் நீர், பசியை போக்கும் உணவு ஆகிய அடிப்படை தேவைப்பாடுகள் மூன்றினையும் எமக்கு வழங்குவது இயற்கை அன்னையே. ஆதலால் பசுமை கட்டிடக் கலை பிரசித்தம் பெற்றமை மனிதனுக்கும் இயற்கை சூழலுக்கும் இடையில் காணப்படும் இடைவெளியினை குறைக்கும் ஒரு முயற்சியாகவே காணப்படுகின்றது.
பசுமை கட்டிடமாவது வெறும் சுவர்கள் பச்சை நிறத்தில் காணப்படும் கட்டிடங்கள் அல்ல இயற்கைச் சூழலை ஒத்த இயற்கைக்கு மிகவும் நெறுக்கமாக அமைக்கப்படும் பசுமை கட்டிடங்கள் சூழலுக்கு நன்மை பயக்கக்கூடியனவாகவும் பொருளாதார பயன் மிக்கதாகவும் மனிதனுக்கு நன்மைகளை பயக்கும். ஆதலால் பசுமை கட்டிடங்களை அமைத்தல் ஒரு கலையாக உருவாகியுள்ளதுடன் அவை தொடர்பிலான பல்வேறு பசுமை சான்றிதழ்களை வழங்கும் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. அவற்றுள் ஐக்கிய அமெரிக்க பசுமை கட்டிடங்கள் தொடர்பிலான பேரவையினால் (USGBC – United states Green Building Council) வழங்கப்படும் LEED, ஐக்கிய இராச்சியத்தின் கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவகத்தினால் (BRE – Building Research Establishment) வழங்கப்படும் BREEAM சான்றிதழ்கள் இரண்டினையும், சிங்கப்பூர் நாட்டின் Green Mark சான்றிதழினையும் உலகின் பிரசித்தமான பசுமை சான்றிதழ்களாக குறிப்பிட முடியும். இந்த சான்றிதழ்களை வழங்கும் செயற்பாடு இலவசமாக நடைபெறாததுடன் ஒவ்வொரு கட்டிட வகைக்கும் (உதாரணம் – தொழில்நுட்ப, வியாபார, வைத்தியவாலை, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வீடுகள், மறுசீரமைப்பு செய்தல், உள்ளக வடிவமைப்புக்கள்) உரிய வெவ்வேறு புள்ளி வழங்கள் நடைமுறைகள் ஊடாக கட்டிடங்களில் காணப்படும் செழிப்பு மற்றும் பசுமை எண்ணக்கருவுக்கான புள்ளிகளை வழங்கும். குறித்த புள்ளிகள் மற்றும் சான்றிதழ்கள் ஒவ்வொரு சான்றிதழ் முறைமைகளுக்கும் அமைய வேறுபடும் (நிகழ்காலத்தில் பார்க்கும் போது – LEED/Green Mark – Platinum, Gold, Silver, Certified, BREEAM – Outstanding, Very Good, Good, Pass)
இந்த அனைத்து எண்ணக்கருவும் வெவ்வேறாக முன்வைக்கப்பட்டிருந்தாலும் அனைத்தும் இறுதியில் பிரதான தலைப்புக்கள் சிலவற்றிலேயே தங்கி நிற்கின்றன. அதில் முதலாவது – கட்டுமானத்திற்காக தெரிவுசெய்யப்படும் நிலத்தின் செழிப்பாகும். அந்த தலைப்புக்குள் சில கூறுகள் அடங்குவதுடன் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாத்தல், பல்வேறுபட்ட மரங்களை நடுதல், பசுமை கூரைகள், மழை நீர் வழிந்தோடுவதை முகாமை செய்தல், கூரையில் மற்றும் தரையில் சூரிய ஔக்கதிர் தெறிப்புச் சுட்டிகளை (Solar Reflectance Index – SRI) சரியான அளவில் பேணல் ஆகியன அவற்றுள் அடங்கும். அவ்வாறே LEED இல் இந்தப் பின்னணியில் கணிப்பிடப்படுவதுடன் BREEAM இல் இன்னுமொரு பின்னணி முன்வைக்கப்பட்டுள்ளன அவை போக்குவரத்து, எரிபொருளினை சிக்கனமாக பயன்படுததும் வாகனங்கள், மின்னியக்க வாகனங்கள், பொது போக்குவரத்து சேவைகள், சைக்கிள் பாவணையினை மேற்கொள்வதனூடாக வாகன பயன்பாட்டினை (Carpool) மேம்படுத்தி மனிதனுக்கு பொருளாதார ரீதியில் நன்மை பயக்கக்கூடியதுடன் சுழல் மாசடைதலை குறைத்தல் மேலும் செயற்றிறன் வாய்ந்த நீரியல் உபகரணங்களின் பயன்பாடு, மழை நீரினை சேமித்தல், கழிவுநீரை சுத்திகரித்தல் போன்ற துறைகளில் ஊடாக வினைதிறன் வாய்ந்த
முறையில் நீரினை பயன்படுத்தல் தொடர்பில் எம்மை ஈடுபடுத்த இந்த பசுமைச் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் செயற்படுகின்றன. அதுமட்டுமல்லாது சக்தி மூலங்களை சரியான முறையில் பயன்படுத்துதல், சூரிய கல பயன்பாடு ஆகியன வினைதிறன் வாய்ந்த மின் உபகரண பயன்பாட்டுக்கும், போதியளவு வளியினைப் பெற்றுக்கொள்வதற்கும் எமக்கு உதவுகின்றன. இதற்கு மேலதிகமான நிலைத்திருக்கும் கட்டிட பொருட்களின் பயன்பாட்டுக்கும், நன்மை பயக்கக்கூடிய பூச்சுக்கள் விசேடமாக குறைந்தளவில் ஆவியாகும் பொருட்களை காபன் பிணைப்பு குறைந்த (VOC – Volatile Organic Compound) பொருட்களை பணன்படுத்துவதற்கும், சுகாதார ரீதியிலான வளியினையும் பேணுவதற்கும் மேற்படி அனைத்து நிறுவனங்களும் புள்ளியிடல் நடைமுறையொன்றின் மூலம் அறிவுறுத்தல்களை வழங்குகின்றன.
இலங்கையில் முதலாவது பசுமைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளப்பட்ட LEED கட்டிடமாவது 2000 ஆம் ஆண்டில் காணப்பட்ட வழிகாட்டல் புத்தகத்திற்கு அமைவாக வெண்கல சான்றிதழ் (Bronze) இனை பெற்றுக்கொண்ட கண்டலம ஹோட்டல் அகும். அவ்வாறே தற்போது இலங்கையில் LEED சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டுள்ள கட்டிடங்கள் 30 அளவில் காணப்படுவதுடன் அவற்றுள் கூடிய புள்ளிகளைப் பெற்ற கட்டிடமாவது மட்டக்களப்பில் இயங்கிவரும் பிரெண்டிக்ஸ் நிறுவனமாகும். அவ்வாறே இலங்கையை போன்றே தென் ஆசியாவிலும் முதலாவது BREEAM சான்றிதழ் பெற்க்கொண்ட நிறுவனமாவது முல்லேரியாவில் இயங்கிவரும் கிரீன் ஹொரைசன் (Green Horizon) தேயிலை தொழிற்சாலையாகும்.
இந்த பூகோல பசுமை எண்ணக்கருவுடன் எமது நாடும் பசுமை யுகத்தை நோக்கி செல்லும் முயற்சியனை மேற்கொண்டு 2009 ஆம் ஆண்டில் பசுமை கட்டிட பேரவை (GBCSL – Green Building Council Sri Lanka) உருவாக்கப்பட்டது. அதன் மூலம் 03 பிரிவுகளின் கீழ் பசுமை யுகத்திற்கு வழிவகுக்கப்பட்டன. பசுமை கட்டிடங்கள் தொடர்பில் சான்றிதழ்களை வழங்கள், கட்டுமான நடவடிக்கைகளுக்கு பசுமை தரச்சான்று சான்றிதழ் விநியோகித்தல் மற்றும் பசுமையாக்கம் தொடர்பிலான தொழிற்சார் பயிற்சிகளை வழங்குதல் அதனுள் உள்ளடங்கும். 2021 ஆம் ஆண்டின் மார்ச் மாதமளவில் கட்டிடங்கள் தொடர்பில் பசுமைச் சான்றிதழ்கள் 61 உம், கட்டுமான மூல பொருட்கள் தொடர்பில் தரச்சான்று சான்றிதழ்கள் 30 உம் மற்றும் 1000 இற்கு மேற்பட்டவர்களுக்கு தொழிற்பயிற்சியினை வழங்குவதற்கும் இந்த நிறுவனம் செயற்பட்டுள்ளது.
அவ்வாறே “பச்சை பசுமை இலங்கை” என்ற பின்னணியின் கீழ் செயற்பட்டு நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உருவான பச்சை பசுமை தரப்படுத்தலானது தற்காலத்தில் அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து கட்டுமானங்கள் தொடர்பிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த பசுமைச் சான்றிதழ் வழிகாட்டியும் இதற்கு முன்னர் விபரிக்கப்பட்ட பின்னணியிலேயே பயணிக்கும்.
பசுமை எண்ணக்கரு விருத்தியின் மூலம் எதிர்காலத்தில் கொங்கிறீட் காடுகள் உருவாகும் சாத்தியக்கூறுகள் குறைவடையக்கூடும்.
Comments are closed for this post.