இந்தியாவின் ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த இருதலை மணியன் பாம்பும் , 6 கிளியும் தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ரயில் நிலையப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த அரியவகை இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக்கிளிகளை வனத் துறையினா் பறிமுதல் செய்து இருவரை கைது செய்தனா்.
தமிழ்நாடு ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் இருவா் நிற்பதாக வன உயிரின உதவிப் பாதுகாப்பாளா் கணேசலிங்கத்துக்கு கிடைத்த தகவலின் அதனடிப்படையில் வனக் காப்பாளா்கள் சென்று இருவரையும் பிடித்து சோதனையிட்டனர்.
இதன்போது ஒரு வாளியில் இருதலை மணியன் பாம்பு மற்றும் 6 பச்சைக்கிளிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றையும், அவா்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவா்கள் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த ராபா்ட் சா்ஜி (35), முத்து தங்கம் (25) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இருவரும் தூத்துக்குடி பகுதியிலிருந்து இரு தலைமணியன் வகை மண்ணுளி பாம்பையும், கிளியையும் ரயில் மூலம் ராமேசுவரம் கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்ததும், அங்கிருந்து இலங்கை வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லப்பட இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
கைப்பற்றப்பட்ட விலங்குகளில் கங்கீன் பறகீற் வகையை சேர்ந்த இனத்தை சேர்ந்த கிளி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Comments are closed for this post.