படம்: Platform on Disaster Displacement

காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டு ஏனைய சுற்றாடல் அழிவுகளை நிறுத்துவதற்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதாரக் கொள்கையின் ஒட்டுமொத்த நிலைமாற்றச் செயன்முறையினை உடனடியாக முன்னெடுக்குமாறு நான்கு சிவில் அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

COP26 தொடர்பிலான சிவில் சமூகங்களின் கூற்றொன்றினை வெளியிட்டுள்ள தேசிய மீன்பிடி ஒத்துழைப்பு இயக்கம் National Fisheries Solidarity Movement (NAFSO), காணி மற்றும் விவசாய மறுசீர் அமைப்பு Movement for Land and Agriculture Reforms (MONLAR), சமூக மற்றும் சமயத்திற்கான நிலையம் Centre for Society and Religion (CSR), சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை Law and Society Trust (LST)
போன்ற இயக்கங்களாவன இவ்வாறான செயன்முறையானது உள்ளூர் சமுதாயங்களின் சமமான பங்கேற்பினை உறுதிப்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

“குறிப்பாக, தீர்மானம் வகுத்தல், மற்றும் அமுல்படுத்தல், செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள், சிறு அளவிலான உற்பத்தியாளர்கள், கிராமியத் தொழிலாளர்கள் மற்றும் இனத்துவச் சிறுபான்மையினர் போன்ற மிகவும் பாதிப்புறுநிலையில் உள்ள குழுக்களின் சமமான பங்கேற்பினை உறுதிப்படுத்த வேண்டும்.,” என்று கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அவ்வறிக்கையின் முழு விபரம் பின்வருமாறு:

  1. COP 26 எனவும் அறியப்படும் 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடே, 26 வது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடாகும். இது ஸ்கொட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரத்தில் 2021 ஒக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறும்.
  2. இந்த வருட மாநாட்டின் இலக்குகளாவன i) நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகளாவிய தேறிய பூச்சிய காபன் வெளியேற்றத்தினை அடைந்து 1.5 பாகையினுள் வெப்பநிலை உயர்வினை வைத்திருத்தல் ii) சமுதாயங்களையும் இயற்கை வாழிடங்களையும்
    பாதுகாப்பதற்காக தகவமைத்தல் iii) மேற்குறிப்பிட்ட இரண்டு இலக்குகளையும் அடைவதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகளின் சர்வதேச நிதி நிறுவனங்களின் அரச மற்றும் தனியார் துறைக் கூட்டுத் தாபனங்களின் நிதிகளைத் திரட்டல் iv) வழங்குவதற்காக அரசாங்கங்கள், வியாபாரங்கள்
    மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றுக்கிடையில் ஒத்துழைப்பினை அதிகரித்தல்.
  3. தற்போது நிலவுகின்ற காலநிலை நெருக்கடிகள் கடந்த காலங்களில் அபிவிருத்தியடைந்த நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றினால் மேம்படுத்தப்பட்ட முதல்வாத மாதிரியின் பெறுபேறாகும். மாற்றமின்றி இதே அபிவிருத்தி
    மாதிரியினை மேம்படுத்தும் அதேவேளை காலநிலை நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்காக இச்செயற்படுனர்களினால் உருவாக்கப்பட்ட திட்டங்களின் தோல்விகளை இன்று நன்கு காணக்கூடியதாக இருக்கின்றது. மக்களினதும் கண்டத்தினதும் நலன்களை விட இலாபத்தினைத் திரட்டுவதற்கு முன்னுரிமை வழங்கும் உலகத் தலைவர்கள் நடப்பு நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கான உண்மையான தீர்வினை வழிநடத்திச் செல்வதற்கான
    அவர்களின் அறநிலையினை இழந்துள்ளனர்.
  4. எனவே, சிவில் சமூக அமைப்புக்களும் சிறு அளவிலான உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக இயக்கங்களும் தொழிலாளர்களும் பெண்களும் ஏனைய அனைத்து சீவராசிகளின் உரிமைகளும் நடப்புப் பொருளாதார, அபிவிருத்தி மாதிரிகளினால்
    உரிமைகள் மீறப்பட்டு நெருக்கடிகளின் பாதகமான தாக்கஙகளின் விளைவுகளுக்கு முகங்கொடுப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களினால் தலைமைதாங்கப்படும் ஒரு புதிய ஏற்பாட்டிற்கு அழைப்பு விடுக்கின்றனர்.
  5. குடிமக்களில் பெரும்பான்மையானவர்கள் தமது வாழ்வாதாரங்களுக்காக இயற்கை வளங்களில் தங்கியுள்ள ஒரு தீர்வுத் தேசமாக இலங்கை இருக்கின்ற காரணத்தினால், குறிப்பாக உணவு உற்பத்தியாளர்களும் உள்நாட்டுச் சமுதாயங்களும் காலநிலை மாற்றத்தின் பாரதூரமான தாக்கங்களைக் கடந்த சில காலங்களாக அனுபவித்துவருகின்றனர். வறட்சி, அதீத மழைகள், பருவத்திற்கு முந்திய மழைவீழ்ச்சி, பருவகாலங்களின் மாற்றம் மற்றும் பீடைகள் மற்றும் நோய்கள் ஆகியவை பயிர் அழிவினை ஏற்படுத்தியுள்ளதுடன் அனைத்துப் பிரதான பயிர்களின் விளைச்சல்களையும் குறைத்துள்ளன. கடல் மட்டங்கள் உயர்வதுடன் சேர்த்து கடல்களில் அங்கிகளில் ஏற்பட்டுள்ள குறைவு காரணமாக ஏற் பட்டுள்ள அறுவடை இழப்பும் சமுத்திர வெப்பமும் கடற்றொழிலில் பாரதூரமான அளவுக்குப் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. காலநிலை மாற்றத்தின் இந்தப் பாதகமான விளைவுகளினால் ஏற்பட்டுள்ள வருமான வீழ்ச்சியினால் விவசாயிகளும் கடற்றொழிலாளர்களும் அதிகரித்த வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக, இவர்கள் தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களைக் கைவிட்டு விடடு நகரங்களுக்குப் புலம்பெயர்ந்து தங்களின் பிழைப்புக்காக நாட்கூலிகளாக வேலைசெய்து வருவதால் உணவு முறைமைகள் அதீத பாதிப்புறுநிலைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றன.
  6. ஆனால் எமது அபிவிருத்திக் கருத்திட்டங்களும் பொருளாதாரக் கொள்கைகளும் எமது சுற்றாடல் முறைமைகளையும் உள்நாட்டு வாழ்வாதாரங்களையும் தொடர்ச்சியாக அழித்துவருகின்றன. பாரிய கூட்டுத்தாபனங்களுக்காக சுற்றாடல் ரீதியாக நீடுறுதியற்ற பாரிய அளவிலான ஏகவினப் பயிர்ச்செய்கைக்காக ஆயிரக்கணக்கான ஹெக்டேயர்கள் காணிகளை விடுவிப்பது தொடர்பாக அரசாங்கம் காட்டிவரும் அதிகரித்த அக்கறையானது ஏற்கனவே சுற்றாடலிலும் காலநிலை மாற்றத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத்
    தொடங்கியுள்ளது. நாட்டின் வேளாண் பூமியின் இதயமான வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரத்தில் உள்ள ராஜாங்கனவிலும் நாட்டின் மிகப் பெரிய தேசிய பூங்காவான வில்பத்தின் பாதுகாப்பு வலயத்திலும் உள்ள 40,000 ஹெக்டேயர்களை எவ்விதமான சுற்றாடல் தாக்க மதிப்பீடும் (நுஐயு) இன்றிக் கற்றாழைப்பயிர்ச்செய்கைக்காக அங்கீகரிக்கும் அரசாங்கத்தின் அண்மைய தீர்மானம் இவ்வாறான நடவடிக்கைளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. கிட்டத்தட்ட 500,000 ஹெக்டேயர்கள் நிலத்தினை “ஏனைய அரச காணிகள்’ எனப் பிரகடனப்படுத்திய
    முன்னைய சுற்றுநிருபங்களை இரத்துச்செய்து இந்த நிலங்களை அபிவிருத்தி நோக்கங்களுக்காக விடுவிப்பதற்காக அவற்றின் நிர்வாகத்தினை வனத்திணைக்களத்திடம் இருந்து மாவட்ட செயலகங்களுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் மாற்றியமை காலநிலை மாற்றம் பற்றிக் கரிசணை கொண்டுள்ள அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிடப்படாத மற்றும் நிலைபேறற்ற அபிவிருத்திக் கருத்திட்டங்கள் தேசியச் சூழல் முறைமைகளையும் எமது உள்ளூர்ச் சமுதாயங்களின் வாழ்வாதாரங்களையும் அழித்துவருகின்றன.
  7. காலநிலை மாற்றத்தின் பாதகமான தாக்கங்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் சிவில் சமூக அமைப்புக்கள் என்கின்ற ரீதியில், எதிர்வரும் COP26 மாநாட்டின் போது உதவியினையும் நிதியினையும் திரட்டுவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை நாம் அங்கீகரித்து அதற்கு உதவவுள்ளோம். காலநிலை மாற்றத் தாக்கத்;தின் மிக மோசமான வடிவங்கள் சிலவற்றினை அனுபவித்துவரும் நாடு என்ற ரீதியில் இலங்கை மக்கள், குறிப்பாக, கிராமிய உற்பத்தியாளர்கள், சர்வதேச சமுதாயத்தின் உதவியினைப் பெறுவதற்கான அருகதையினைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களினால் தங்களின் வாழ்வினையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாத்து மீளுருவாக்க முடியும்.
  8. ஆனால், இயற்கை வளங்களைச் சுரண்டி உள்ளூர் வாழ்வாதாரங்களை அழிப்பதை நோக்கிய தனது பெரும்போக்கு அபிவிருத்தி நிகழ்ச்சிநிரலை அரசாங்கம் தொடர்ந்தால், எமக்குக் கிடைக்கும் காலநிலை நிதியிடல் அல்லது வேறு ஏதாவது உதவிகளினால் விரும்பப்படும் பெறுபேறுகளை எம்மால் அடையமுடியாமல் போய்விடும் என நாம் அஞ்சுகின்றோம். அபிவிருத்தியடைந்த நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் எம்மீது திணித்த அபிவிருத்;தி மாதிரியே இந்த அழிவுகளை ஏற்படுத்தி எம்மைப் பாதிப்புறுநிலைக்கு ஆளாக்கியுள்ளன என்பதை
    நாம் அவற்றிற்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
  9. காலநிலை மாற்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சவால்களுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டுமாயின் எமது அபிவிருத்தி அணுகுமுறைக்குப் பூரணமான நிலைமாற்றம் தேவைப்படுகின்றது. உள்ளூர் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்து எமது சுற்றாடல் முறைமைகளின் மீள்பிறப்பாக்க ஆற்றல்களை மேம்படுத்துவதை முன்னுரிமைப்படுத்தும் அபிவிருத்தி முறைமையே எமக்குத் தேவைப்படுகின்றது.
  10. ஓர் அடிப்படை மனித உரிமையாக, சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான சுற்றாடலுக்கான உரிமையினை எமது பொருளாதாரக் கொள்கைகளும் அபிவிருத்திக் கொள்கைளும் சமூகக் கொள்கைகளும் அங்கீகரித்துப் பாதுகாப்பதே எமக்குத் தேவைப்படுகின்றது. சுற்றாடல் முறைமைகளில் தங்கியுள்ள உள்ளூர்ச் சமுதாயங்கள் உருவாக்கி அமுல்படுத்தப்படும் எந்தக்கொள்கையினதும் நிகழ்ச்சித்திட்டத்தினதும் பிரதான பங்கீடுபாட்டாளராக அங்கீகரிக்கப்படவேண்டும். இது அவர்களின் வளங்கள் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுவதற்கு இட்டுச்செல்லாமல் அவர்கள் தங்களின் வாழ்வாதாரங்களைச் சுற்றாடல் நீடுறுதிமிக்க முறையில் விருத்திசெய்வதற்கு அவர்களுக்கு உதவவேண்டும். பெண்கள், இனத்துவச் சிறுபான்மையினர் மற்றும் சுதேச மக்கள் போன்ற விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள குழுக்களின் குரல்களுக்குக் கொள்கைளின் உருவாக்கம் மற்றும் அமுல்படுத்தல் செயன்முறையினுள் சமமான தளம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
  11. எமது உள்ளூர் உணவு முறைமைகளை அழிக்கும் ஏகவினப் பயிர் விவசாயக் கூட்டுத்தாபனங்களின் மீதுள்ள கவனக்குவிப்பினை மாற்றுவதன் மூலம் எமது விவசாய முறைமையில் நாம் மறுசீராக்கலைக் கோருகின்றோம். விவசாய இரசாயனங்களை பதிலீடு செய்து விவசாயச் சூழியலை நோக்கி நகர்வதே அவசரத் தேவையாக உள்ளது என்பதுடன் இது நீண்டகாலத் தொலைநோக்குடனும் பரிபூரணமான திட்டத்துடனும்
    மேற ;கொள்ளப்படவேண்டும்.
  12. எமது ஒட்டுமொத்த அபிவிருத்தி, பொருளாதார மற்றும் சமூகக் கொள்கையில் இவ்வாறான பரிபூரணமான மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படாமல் கிடைக்கும் திட்டமிடப்படாத காலநிலை நிதியிடல் செயற்திறன் அற்றதாக மாத்திரமே இருக்கும் என்பதுடன் அது எமது இயற்கை வளங்களைப் பண்டங்களாக்கி அவற்றினை இலாபத்தினைப் பிழிவதற்காகத் தனியார் உரித்தாண்மையின் கரங்களுக்கும் மாற்றிவிடும்.
  13. எனவே காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொண்டு ஏனைய சுற்றாடல் அழிவுகளை நிறுத்துவதற்கு எமது அபிவிருத்தி மற்றும் பொருளாதாரக் கொள்கையின் ஒட்டுமொத்த நிலைமாற்றச் செயன்முறையினை உடனடியாக முன்னெடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறான செயன்முறையானது உள்ளூர்ச் சமுதாயங்களின் சமமான பங்கேற்பினை உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக, தீர்மானம் வகுத்தல ; மற்றும் அமுல்படுத்தல ; செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள், சிறு அளவிலான உற்பத்தியாளர்கள், கிராமியத் தொழிலாளர்கள் மற்றும் இனத்துவச் சிறுபான்மையினர் போன்ற மிகவும் பாதிப்புறுநிலையில் உள்ள குழுக்களின் சமமான
    பங்கேற்பினை உறுதிப்படுத்தவேண்டும்.
  14. நடப்பு அபிவிருத்தி மாதிரிக்கு நிதியிடுவதற்கோ அல்லது அவற்றிற்கு அழுத்தம் கொடுப்பதற்கோ அபிவிருத்;தியடைந்த நாடுகளுக்கோ சர்வதேச நிதி நிறுவனங்களுக்கோ ஏனைய அபிவிருத்திப் பங்காளர்களுக்கோ எவ்விதமான உரிமையும ; இல்லை என்பதை நாம் இறுதியாக மீண்டும் ஒரு தடவை வலியுறுத்த விரும்புகின்றோம். அவர்களின் அவ்வாறான செயற்பாடுகளே தற்கால நெருக்கடிகளுக்கான பிரதான காரணமாகும். இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்தினதும் உரிமைகளைப் பாதுகாக்கின்ற அவற்றுக்கேயுரியதான அபிவிருத்தி மாதிரிகளை உருவாக்குவதற்கு அவர்கள் அனுமதியும் ஆதரவும் வழங்க வேண்டும்.