அம்பாறை  மாவட்டம் சம்மாந்துறை ,நிந்தவூர்,காரைதீவு ,பகுதியை கடந்த சில நாட்களாக தினமும்  மாலை யானை கூட்டம் ஒன்று   ஆக்கிரமிப்பு செய்து வருகின்றதுடன் வேளாண்மை விதைப்பை தொடர்ந்து  காடுகளை நோக்கி திரும்புகின்றன.                                                                                                                

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியை ஊடறுத்து செல்லும் பிரதான வீதியின் ஊடாக நிந்தவூர் மற்றும் காரைதீவு   பகுதியின்  வீதியின் ஒரு மருங்கிலும் குறித்த யானைகள் உலா வருகின்றன.

சுமார் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான  யானைகள் அப்பகுதியில்  உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி   வருகை தந்துள்ளன.

எனினும் வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ளமையினால் மீண்டும் காடுகளை நோக்கி படையடுத்துள்ளதை அவதானிக்க முடிந்தது.மேலும் அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனாலும் ஊருக்குள் யனைகள் சென்று தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தினமும்  அப்பகுதிக்கு வரும்  யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட்டு வருகின்றதுடன்  இவ்வாறு வயல்வெளிகளை  நோக்கி வருகை தந்துள்ள யானைகளை விரட்டும் பட்சத்தில் அவை ஊருக்குள் நுழைந்து பலன் தரும் மரங்களையும் மற்றும் உடைமைகளையும் அழிப்பதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

உணவுக்காக நெல் அறுவடையின் பின்பு வயல் நிலையங்களைத் தேடி வரும் நூற்றுக்கணக்கான யானைகள், விரட்டப்படும் பட்சத்தில் அவை உள்ளூர் குடியிருப்புக்களை நோக்கி நகர்ந்து பலன் தரும் மரங்களை அழிப்பதாக உள்ளூர் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். அம்பாறை மாவட்டத்தில் மட்டும், கடந்த வருடம் குறைந்தது 20 யானைகள் பொலித்தீன் குப்பைகளை உணவாக உட்கொண்டு இறந்ததாக வனவிலங்கு திணைக்களம் குறிப்பிடுகின்றது. படங்கள்: பாறுக் ஷிஹான்