கனிய மணல் அகழ்வு எனும் போர்வையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கு எதிராக, கொக்கிளாய் கிராம மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்படட கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான கிராமங்களில் 12 கிலோமீற்றர் நீளமான கடற்கரையுடன் இணைந்த கிராம மக்களின் சுமார் 1000 ஏக்கர் பூர்வீக நிலங்கள் கனிய மணல் அகழ்வு என்ற பெயரில் அபகரிக்க நடவடிக்கைகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே சிங்கள குடியேற்றங்களாலும் ,இராணுவ ஆக்கிரமிப்பாலும் மகாவலி எல் வலயத்தாலும் , வன ஜீவராசிகள் திணைக்களம் , வளவள திணைக்களம் , தொல்லியல் திணைக்களம் ,போன்ற அரச இயந்திரங்களின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பால் இருப்பு கேள்விக்குள்ளாகி வரும் தமிழ் மக்களின் எல்லை கிராமங்களில் மேலதிகமாக கனிய மணல் கூட்டுதாபனத்துக்கு என மிகுதி நிலங்களையும் அபகரிக்கும் வேலையை அரசு மிக திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்றது.
எனவே தமிழ் மக்களுக்கு சொந்தமான இந்த நிலங்களை அபகரிப்பததை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொக்கிளாய் கிராம மக்களால் (12) இன்று சனிக்கிழமை சற்று முன்னர் கொக்கிளாய் பாடசாலை முன்பாக எதிர்ப்பு போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
கொக்கிளாய் கிராம மக்கள் முன்னெடுக்கும் குறித்த போராட்டத்தில் மக்களுடன் இணைந்து மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
Earth ஊடக வலையமைப்பின் (Earth Journalism Network -EJN) நிதிப் பங்களிப்புடன் அறிக்கையிடப்பட்ட ஓர் புலனாய்வுக் கட்டுரையொன்றின் பிரகாரம் இலங்கையின் பெரும் பொருளாதாரத்தை ஈட்டும் நோக்கில் இலங்கை கனிப்பொருள் மணல் லிமிட்டெட் என்னும் கணியவளங்களை திரட்டும் அரச நிறுவனம் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய், கொக்குத்தொடுவாய், நாயாறு, முகத்துவாரம், செம்மலை ஆகிய இடங்களின் கடற்கரைப் பகுதிகளில் இருந்து விரைவில் இல்மனைற் அகழ்வதற்கான பணியினை சத்தம் சந்தடியின்றி அண்மையில் ஆரம்பித்துள்ளது.
இல்மனைற் என்னும் கனியவளமானது சோளர் (Solar) என்னும் சூரிய சக்தியில் மின்சாரத்தை பெறுகின்ற கலத்தை உருவாக்கவும் அதன் இறுதிப் பகுதி வண்ணப்பூச்சு உற்பத்திக்கும் பயன்படுகின்ற ஓர் முக்கிய கனியவளமாகும்.
இந்த கனியவளம் இலங்கை கனியவளக் கூட்டுத்தாபணத்தின் மூலம் பெறப்பட்டாலும் இல்மனைற்றில் இருந்து சோளரைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏதும் இலங்கையில் பெரிய அளவில் ஆரம்பிக்கப்படாமையினால் இன்றுவரை சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிற்கே இல்மனைற் அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
Comments are closed for this post.